news
சிறப்புக்கட்டுரை
ஆட்சியாளர்களின் கைப்பாவையா Ai? (உலகம் உன் கையில்! – 21)

புதுமைகள் படைத்து, சமுதாயத்தை மாற்றியமைத்து, உலகில் பல துறைகளின் முன்னேற்றத்திற்குத் துணைநிற்கும் தொழில்நுட்பமாக .. இன்று விளங்குகிறது.

ஒரு தொழில்நுட்பத்தை நன்மை அல்லது தீமையென்றில்லாமல், அதனை நாம் எவ்வாறு மதிப்பிடுகிறோம், கையாள்கிறோம் என்பதைப் பொருத்தே கணிக்கிறோம். ஆனால், இன்று வளர்ந்து வரும் நவீனத் தொழில்நுட்பங்கள், ஆதிக்க ஆட்சி முறை தலைதூக்க ஏற்ற சூழலை உருவாக்குகின்றனவா? என்ற ஐயம் எழச்செய்கிறது.

கட்டுப்பாடு மற்றும் சமநிலையைக் (checks and balances) கொண்டு இயங்குவதாகவே மக்களாட்சி எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இம்முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களே இவற்றை மெல்ல வலுவிழக்கச் செய்கிறார்கள் என்பதே கடந்த 20 ஆண்டுகால அனுபவமாக உள்ளது. மிகச் சக்தி வாய்ந்த சில நாடுகள், உலக அரசியல் அரங்கில் நேரத்திற்கேற்ப அணி மாறுவது இதற்குச் சான்றாகவும் பார்க்கப்படுகிறது. இரட்டை வேடம் என்பது மனித உரிமைத் தத்துவத்திற்கு முரணானது என்றாலும், இன்று பெரும்பாலும் சக்தி வாய்ந்தவை என்று கூறிக்கொள்ளும் நாடுகள், இவ்வேடத்தைத் தவிர்க்க இயலாமல் உள்ளன. இந்நிலையில் .. ஓர் இயந்திரமாக மனிதனைப் போன்று செயலாற்றலில் வளர்வதும், இதன் வேகமும் திசையும் மக்களாட்சித் தத்துவத்தின் அடித்தளத்தை ஒருநாள் அசைத்துவிடுமோ என்ற ஐயம் எழுகிறது.

இன்று அதிகார வர்க்கத்தினர் அறிவாற்றல் மிக்கோரைக் (target intellectuals) குறிவைப்பதும், சாதகமானோரைப் பொறுப்பில் அமர்த்துவதும், ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் அறிவுசார் திறன்படைத்த வகுப்பினரை  ஒதுக்குவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் பார்க்கிறோம். இந்நிலையில் ஓரிட அதிகாரக் குவிப்பு-சர்வாதிகாரம்; மற்றொன்று, நிர்வகிக்க இயலாத அதிகாரப் பகிர்வு என்பவை ஆட்சியாளர்களின் கையில் .. உகந்த கைப்பாவையாகிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

மனித உரிமைப் போராளிகளின் ..

அண்மைக்காலமாக மக்களாட்சித் தத்துவம் வளர்ச்சியடையாமல் தளர்ந்துவிட்டதென்பதை இன்றைய தொழிற்சங்கங்களின் வலுவிழந்த நிலையிலிருந்தே தெரிந்துகொள்கிறோம். ஆனால், இவ்வாறான குறைந்து வரும் மக்கள் பங்கேற்பிற்குத் தொழில் வளரவில்லையென்று கூற முடியாது; ஏனென்றால், பெரும் பலம் வாய்ந்த சுயநலவாதிகள் மற்றும் நிறுவனர்கள் தொழில்நுட்ப எழுச்சியின் காப்பாளர்களாக உள்ள நிலையில் சமத்துவம், மக்களாட்சித் தத்துவம் மேலோங்க முடியவில்லை என்ற பார்வையும் உள்ளது.

சில நாடுகளில் சர்வாதிகார ஆட்சி சட்ட ஒழுங்கின்படி இல்லாமல், வைத்ததுதான் சட்டம் என்ற முறையிலிருப்பதையும் பார்க்கிறோம். இந்நிலையில் மனித உரிமைகளைக் காக்கவும், அதனை முன்னெடுத்துச் செல்லும் போராளிகள், அதிகாரத்தின் முன் பலவீனர்களாக  நிதி, கருவி, பயிற்சி என்பவற்றில் குறைந்தவர்களாகவே இருந்தனர் என்பதுதான் கடந்தகால வரலாறு. இவ்வகுப்பினரை .. கொள்கை உருவாக்கத்தில் இணைப்பதனால் .. அமைப்புகள் வெளிப்படைத்தன்மை, பொறுப்பு, மனித உரிமை என்பவைகளின் பாதுகாவலராக அமைவார்கள் என்ற கூற்றும் நிலவுகிறது.

சர்வாதிகாரிகளின் ..

.. தொழில்நுட்பத் துணையோடு கண்காணித்தல், குறிவைத்துத் தாக்குதல், அடக்குமுறை என்பவை, வலிமையான சர்வாதிகார ஆட்சிமுறையாளர்களின் கை மேலோங்கியிருப்பதை வெளிப்படுத்துவதாகவே பார்க்கப்படுகிறது. வரம்பில்லாக் கண்காணிப்புகள், முகஜாடை அறிதல், முன்கணிப்பு காவல்முறை (predictive policing), ஆன்லைன் தொல்லைகள், தேர்தல் குளறுபடிகள் என்பனவற்றில் .. ஒரு சக்திவாய்ந்த கருவியாகச் சில அமைப்புகளிடம் சிக்கியிருக்கிறது.

சில நாடுகளில் எண்ணற்ற .. முகஜாடைக் கருவிகள் பல இடங்களில் பொருத்தப்பட்டு, பொதுமக்கள் அனைவரும் எந்நேரமும் கண்காணிப்பு வளையத்தில், தங்கள் சுதந்திரத்தை இழக்கும் நிலையை உணர்கின்றனர். பல நாடுகளுக்கு இத்தொழில்நுட்ப ஏற்றுமதியின் வேகம் மற்றும் வளர்ச்சி, எரியும் கொள்ளியில் எண்ணெய் வார்ப்பது என்பதாகவும் பார்க்கப்படுகிறது.

இயந்திரக் கண்கள்-கண்காணிப்பின் மூலம் நன்மைகளிருந்தாலும், இத்தொழில்நுட்பத்தை ஒருவரின் சாதகத்திற்கேற்ப பணிப்பது நீதிக்குப் புறம்பானதாகவும், மனித உரிமை மீறலாகவும், சில நேரங்களில் ..யினால் தொடுக்கப்படும் செய்திகள் குழப்பத்தை ஏற்படுத்தப் பயன்படுத்துவதையும் பார்க்கிறோம்.

உலகில் சர்வாதிகார வர்க்கத்தினர் தங்கள் ஆட்சியைத் தக்கவைக்கவும், அடக்குமுறைகளுக்குப் பயன்படுத்தும் .. தொழில்நுட்பத்திற்கு மனித உரிமைப் போராளிகள் இளைத்தவர்களாகவே உள்ளனரென்பதே இன்றைய நிலையாகவும் உள்ளது.

..-யின் எதிர்காலக் கட்டமைப்பு

அண்மையில்ஓபன் ..’ நிறுவன உலகத் தலைமை அதிகாரி கிரீஸ் லெஹேன் என்பவர் அளித்த பேட்டியில், ..யின் எதிர்காலம் என்பது மக்களாட்சி ..-க்கும், சர்வாதிகார ..-க்குமான போட்டியில் இருக்கும்; அதாவது, எத்தனை நாடுகள் இத்தொழில்நுட்பத்தால் ஆளுமை செய்யப்படுகின்றன? தனிமனித ஆட்சியா? அல்லது அரசு ஆட்சியா? என்பதைப் பொருத்து அமையுமென்கிறார்.

இன்று இத்தொழில்நுட்பத்தில் முதன்மை வகிக்கும், ஆனால் ஆட்சி முறையில் மாறுபட்டு விளங்கும் நாடுகளான அமெரிக்கா, சீனா இடையேயான போட்டியே இதனைத் தீர்மானிக்கும் என்கிறது ஒரு பார்வை.

மக்களாட்சி .. அமைப்பு வெளிப்படைத் தன்மை, சட்டம்-ஒழுங்குமுறை. தனிமனிதத் திறனை வெளிப்படுத்துதல் என்பவைகளுக்கு ஆதாரமாக விளங்கும் நிலையில்சர்வாதிகார .. உருவாக்கம்என்பது இயல்பாக, மத்திய ஆட்சி மையம் மற்றும் அதிகாரக்குவியல் என்றே கருதப்படுகிறது.

news
சிறப்புக்கட்டுரை
டிஜிட்டல் குப்பை (வலையும் வாழ்வும் – 44)

காலை நேரம். சோகம் கலந்த அழகுடன் காட்சியளிக்கிறது கடல். அங்கு அலைகள் வந்து போகும் இடத்தில் கவிதா நிற்கிறாள். அவள் கர்ப்பமாக இருப்பது தெரிகிறது. ஒரு கையில் சிறிய குழந்தைப் பொம்மையை இறுக்கமாகப் பிடித்திருக்கிறாள். மறு கை அவளது வயிற்றின்மீது பயத்துடன் பதிந்திருக்கிறது. பல முறை கரு கலைந்த வலியின் காரணமாக, இந்த முறை அவள் நம்பிக்கையைக்கூட முழுதாக நம்பப் பயப்படுகிறாள்.

அவள் பார்வை வறண்டு, அசுத்தமாகக் காணப்படும் கடலின்மீது நிலைத்திருக்கிறது. அந்தக் கடலின் மலட்டுத்தன்மை, தன் உடலின் நிலையை நினைவுபடுத்துவதுபோல ஓர் அச்சம் அவளுக்குள் படர்கிறது.

இந்தக் கடல் போல என் கர்ப்பமும் விசமாகி விடுமோ?’ என்ற பயம் அவள் முகத்தில் தெரிகிறது.

அவ வயிறு ஒழுகுற பானை, எதையும் வச்சுக்காது, ‘இந்தப் பிஞ்சையாவது கொல்லாமப் பாத்துக்கோஎன்ற ஊராரின் குரல்கள் அவள் காதில் ஒலிக்கின்றன.

உங்க வேலைய நீங்க ஒழுங்கா பாருங்க; யாரு வீட்டுல எப்ப சாவு விழாதானே பார்த்துட்டு இருக்குது சனியங்கஎன்று கோபத்தில் கொப்பளித்தாள் கவிதா.

நடுக்கடல், நண்பகல். சூரியன் சுட்டெரிக்க, தன் பழைய மரப்படகில் கண்ணன் தனிமையில் போராடுகிறான். இது வெறும் மீன்பிடி அல்ல; தன் மனைவி மற்றும் பிறக்காத குழந்தைக்கான ஒரு போராட்டம். அவன் தன் முழு பலத்தையும் திரட்டி வலையை இழுக்கிறான். நம்பிக்கையுடன் மேலே வரும் வலையில் பளபளக்கும் மீன்களுக்குப் பதிலாக, அருவருப்பான குப்பைகள் நிறைந்திருக்கின்றன. செத்த ஜெல்லி மீன்கள் போன்ற பிளாஸ்டிக் பைகள், உடைந்த செருப்பு, நாற்றமெடுக்கும் கழிவுகள் மற்றும் சில நோய்வாய்ப்பட்ட புண்களுடன் துடிக்கும் மீன்கள்.

கண்ணனின் முகம் கோபத்திலும் கையறு நிலையிலும் விகாரமாகிறது. அந்த நோய்வாய்ப்பட்ட அல்லது செத்த மீன்களைப் பார்க்கையில் அவன் துடிதுடித்துப்போகிறான். இன்றைக்கும் வெறுங் கையராய் வீடு திரும்புவதை நினைத்து புலம்புகிறான். விரக்தியில் அந்தக் குப்பைகளை மீண்டும் கடலிலேயே உதறிவிடுகிறான். கரைக்கு வரும் போது வழியிலே கிடந்த காலி பிளாஸ்டிக் பாட்டிலை விரக்தியில் தன் காலால் எட்டி உதைக்கிறான். எங்கோ தூரத்தில் குப்பை பொறுக்கிக்கொண்டிருந்த கருப்பன் அந்தப் பிளாஸ்டிக் பாட்டிலையும் சேகரித்துக்கொண்டு கண்ணனையே பார்த்துக் கொண்டிருக்கிறான்.

இரவு அவர்களின் சிறிய குடிசை. ஒற்றை மண்ணெண்ணெய் விளக்கு எரிந்து, இருட்டும் நிழலும் நிறைந்த ஓர் இறுக்கமான சூழலை உருவாக்குகிறது. தரையில் அமர்ந்திருக்கும் கவிதாவுக்கும் கண்ணனுக்கும் இடையில் ஒரு தட்டில் பழங்கஞ்சி மற்றும் சுட்ட சிறிய மீன்கள் இருக்கின்றன. கண்ணன் அதை கவிதாவிடம் நகர்த்தி, ‘குழந்தைக்காகவாவது சாப்பிடுஎன்கிறான். சோகத்திலும் சோர்விலும் உடல்நலக்குறைப்பாட்டிலும் இருந்த கவிதா இருமிக்கொண்டே தட்டிலிருந்த சாதத்தை எடுத்து அவனுக்குப் பரிமாறி தானும் சாப்பிடுகிறாள். இருவரும் கஞ்சியைக் குடிக்கும்போது இடையிடையே அங்கிருந்த மீன்களையும் கடித்துக்கொள்கிறார்கள். அன்றைக்கு நடந்த கதைகளைப் பேசுகின்றார்கள். அவர்களிடையே அந்நியோன்யமும் அன்பும் உடல்நலக்குறைவிலும் வெளிப்படுகிறது.

இரவு நேரம். அவர்கள் தூங்கியிருந்த வேளையில் ஒரு மூர்க்கமான புயல் கிராமத்தைத் தாக்குகிறது. காற்று ஊளையிட, பேய்த்தனமான மழை பெய்கிறது. குடிசைக்குள் கவிதா பாயில் துடிக்கிறாள். அவள் பயந்து கொண்டிருந்த அந்தத் தருணம் வந்துவிட்டது. ஒரு கூர்மையான, கொடுமையான வலி அவள் வயிற்றைத் தாக்க, அவள் உடல் நெளிகிறது. ஒரு மின்னல் வெட்டு அவளது பயம் நிறைந்த முகத்தை ஒளிரச் செய்கிறது. அதேநேரத்தில், கடற்கரையில் இராட்சத அலைகள் கரையை மோதுகின்றன. அவை நுரையை அல்ல, செத்த மீன்களையும், கரிய எண்ணெய் போன்ற கசடுகளையும் கக்குகின்றன.

குடிசைக்குள் கவிதாவின் உடலிலிருந்து இரத்தம் வெளியேறத் தொடங்குகிறது. காதைப் பிளக்கும் இடிச் சத்தத்துடன் எல்லாம் முடிந்து போகிறது. கடல் தன் கழிவுகளை இரத்தமாகச் சிந்த, கவிதா தன் உயிரை இரத்தமாகச் சிந்துகிறாள். கடலின் கரு கலைவதும், ஒரு பெண்ணின் கரு கலைவதும் ஒரே கணத்தில் நிகழ்கின்றன.

புயல் ஓய்ந்த காலை. வானம் உணர்ச்சியற்ற சாம்பல் நிறத்தில் இருக்கிறது. கடற்கரை முழுவதும் குப்பைக் குவியல்கள் காட்சியளிக்கின்றன. பிளாஸ்டிக் வலைகள், தொழிற்சாலைக் கழிவுகள் என எங்குப் பார்த்தாலும் அசுத்தம்.

தட்டியெழுப்பும் அம்மாவின் கைபோலச் சூரிய ஒளி கவிதாவை எழுப்ப, அவள் தன் படுக்கையிலிருந்து எழுகிறாள். கடற்கரை நோக்கி நடந்த கவிதா, அந்தக் குப்பைகளுக்கு நடுவே வந்து நிற்கிறாள்.

அப்போது அவள் கண்கள் எதையோ காண்கின்றன. குப்பைகளுக்குள் புதைந்திருந்த தன் குழந்தைப் பொம்மையை வெளியே எடுக்கிறாள். அது கறை படிந்து, ஒரு கை கிழிக்கப்பட்டுச் சிதைந்து கிடக்கிறது. அது அவள் இழந்த குழந்தையின் சின்னமாகத் தோன்ற, அவள் உடைந்து போகிறாள். அவளது அழுகை, சத்தமற்ற, ஆழமான ஓலமாக அந்தக் கடற்கரையில் காற்றோடு காற்றாய் கரைகிறது.

டிஜிட்டல் உலகம் மின்னல் வேகத்தில் வளர்ந்து கொண்டிருந்தாலும், அது அந்த வளர்ச்சிக்காகக் கொடுக்கக்கூடிய விலையென்பது மிகவே அதிகம். 2025-ஆம் ஆண்டில் இந்தியா 2.2 மில்லியன் டன் மின்னணுக் கழிவுகளை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய மின்னணுக் கழிவு உற்பத்தியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது.

சாதாரணமான கழிவுகளையே அப்புறப்படுத்துவதற்கும், அதனை மறுசுழற்சி செய்வதற்கும் நாம் திணறிக்கொண்டிருக்கும்போது, இந்த மின்னணுக் கழிவுகளை மேலாண்மை செய்வதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?

இந்தியாவின் ஒட்டுமொத்த மின்னணுக் கழிவுகளில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமானவை வெறும் 65 நகரங்களில் இருந்து மட்டுமே உருவாகின்றன. 2017-18-ஆம் ஆண்டில் 0.71 மில்லியன் டன்னாக இருந்த இந்தக் கழிவுகள், தற்போது 150 விழுக்காடு வரை அதிகரித்துள்ளன என்றுதி இந்துபத்திரிகைச் செய்தி வெளியிட்டிருக்கிறது.

மின்னணுப் பொருள்களின் பயன்பாடு இனி வரும் காலத்தில் இன்னும் அதிகமாகும் என்கின்ற நிலை வரும்போது, அதிகரிக்க இருக்கும் மின்னணுக் கழிவுகளை மேலாண்மை செய்ய சரியான திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். இந்தியாவில் 322 பதிவு செய்யப்பட்ட முறையான மறுசுழற்சி மையங்கள் இருந்தபோதிலும், அவற்றால் மட்டும் பெருகிவரும் இந்தக் கழிவுகளை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, முறையான மறுசுழற்சி மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு அதில் பணிசெய்கின்ற தொழிலாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யவேண்டும்.

டிஜிட்டல் மயமாகும் இன்றைய உலகில் நாம் பெறும் வசதிகளுக்குப் பின்னால், ஒரு பெரிய சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலப் பேரழிவு மறைந்திருக்கிறது. மின்னணுக் கழிவுகளை முறையாக மேலாண்மை செய்யாவிட்டால், அது எதிர்காலத்தில் மிகப்பெரிய நகர்ப்புற நெருக்கடியாக மாறக்கூடும். அது மட்டுமல்லாமல், இக்கழிவுகளைச் சேகரிக்கும் சாமானிய மனிதர்கள், அவற்றைப் பிரித்தெடுக்கும் இரும்புப் பட்டறைத் தொழிலாளர்கள் போன்றோர் மிகவும் மோசமான உடல்நலக்கேட்டிற்குத் தள்ளப்படுகின்றனர்.

நிலையான நீடித்த வளர்ச்சி (Sustainable Growth) என்பது, வெறும் தொழில்நுட்பம் சார்ந்தது மட்டுமல்ல; அது சுற்றுச்சூழல் மற்றும் விளிம்பு நிலை மக்களின் சுகாதார வாழ்வைப் பாதுகாப்பதாகவும் இருக்கவேண்டும்.

news
சிறப்புக்கட்டுரை
‘ஒற்றை’ அரசியலும் ஒருமைப்பாடும்

இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கின்ற இவ்வேளை, எதிரே இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியில், தில்லி நாடாளுமன்ற அமர்வு கண்முன்னே காட்சி தருகின்றது.

நாம் வாழும் காலத்தில், இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கம் பற்றிய விவாதம் (Debute) நடந்த போதும், அரசமைப்புச் சட்ட வரைவு நீண்ட பெரிய விவாதங்களுக்குப் பின் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட போதும், வானொலி மூலம் கேட்டுப் பரவசம் கொண்டோர் பகிர்ந்ததைக் கேட்டு மகிழ்ந்ததுண்டு.

இன்று உலக நிகழ்வுகள் தொலைக்காட்சி மூலம் வீட்டின் அறைகளை ஆக்கிரமித்துள்ள நிலையில், அரசமைப்புச் சட்ட வரைவு ஏற்றுக்கொள்ளப்பட்டபோது மகிழ்வுள்ளதாகக் கூறியவர்கள் இன்று இல்லை; ஆனால், எந்த அரசமைப்புச் சட்டம் உலகின் சனநாயக நாடுகள் தோற்றுவித்த அரசமைப்புச் சட்டங்களுள் மேன்மைமிக்கது என்று பெருமைப்பட்டுக் கொண்டோமோ, அந்த அரசமைப்புச் சட்டம் நம் கண்முன்னே பெரும்பான்மைவாத அரசு ஒன்றினால் சிதைக்கப்படுவதைக் கண்முன்னே காணும் கெடுவாய்ப்பு நமக்குக் கிட்டியுள்ளது.

ஏனிந்த அவசரம்?

தமிழ்நாடு, வங்காளத்தில் வேகமெடுத்துள்ள தேர்தல் களேபரங்களூடே, இவ்வளவு வேகமாகத் தொகுதி வரையறை மசோதா அறிமுகப்படுத்த வேண்டுவதன் அவசியம் என்ன?

ஆர்.எஸ்.எஸ். எனும் மூல அமைப்பு முன்னெடுத்த கொள்கைகள்சித்தாந்தங்கள் பல இந்தியத் தேசியத் தலைவர்களின் சித்தாந்தத் திற்கு எதிரானவை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூலக்கொள்கைகளை இந்திய தேசிய தலைவர்கள் சாத்தியமற்றவை என்று மட்டுமில்லாமல், அரசியல் அறத்திற்கும், மாந்தர்தம் சமாதான வாழ்விற்கும் எதிரானதென்றே கருதினர். மக்களை மதவாத ரீதியில் பிரித்து, மத அடிப்படைவாத அரசொன்றினை நிறுவும் முயற்சி சனநாயக, சமயச் சார்பற்ற அரசின் கொள்கைகளால் சிதைந்துபோகும் என்று நம்பினர். நம்பிக்கையில் தவறில்லை; ஆனால், நம்பிக்கையில் நடைமுறை சாத்தியம் இல்லையே!

இன்று, ஒரு மதவாதக் கட்சி தானே என்று ஒதுக்கப்பட்ட ஒரு கட்சி, கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவை ஆண்டு வருகின்றது. இப்பிரிவினை அமைப்புப் பேசிய கொள்கைகள் மற்றும் திட்டங்கள் அனைத்துமே சாத்தியமற்றவை என்று உறுதியாக நம்பிவந்த நிலையில், பாரதிய சனதா கட்சிக்கும், அதன் பொறுப்பிலிருக்கும் அரசிற்கும் எல்லாம் சாத்தியமே. எல்லாமே சாத்தியமாயிற்று. இன்றுவரை இவர்களால் சாத்தியமாகாதது எதுவுமில்லை.

இந்து தேசமும் சாத்தியமே!

இன்றையதி இந்துஆங்கில நாளிதழில் (16.01.2026) ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது. மத்தியப் பிரதேசத்தைச் சார்ந்த இந்து மதக்குரு திரேந்திர கிருட்டிண சாஸ்திரி. இவர் நடத்தும் அமைப்பின் பெயர்பகேஷ்வர் டாம் (Bageshwar Dham). இந்த மதரீதியான அமைப்பிற்கு இந்திய உள்துறை அமைப்பு வெளிநாட்டு நிதி உதவியைப் (FCRA) பெறுவதற்கான பதிவை (registration) வழங்கியுள்ளதாம்!

இந்த மதக்குருவின் முக்கியக் கொள்கை என்ன தெரியுமா? இவர் இந்து இராஷ்டிராவை நிர்ணயிப்பதில் உறுதியாக உள்ளாராம்! இந்தியாவில் தேச விரோதச் செயல்களில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றம்சாட்டி, மக்களுக்காகச் செயல்படும் நியாயமான அமைப்புகளின் உரிமங்கள் பறிக்கப்பட்ட நிலையில், இந்து இராஷ்டிரத்தைக் கட்டமைக்கவிருக்கும் ஒரு மதத் தீவிரவாத அமைப்பிற்கு இந்திய அரசு அந்நிய நிதிபெற அனுமதிக்கிறது. இது என்ன வேடிக்கை! இவ்வளவு அப்பட்டமாகத் தன் உள்ளடக்கத்தை வெளிக்காட்டி வரும் இந்துத்துவர்களின் இறுதி இலக்கு எட்டும் தூரத்தில்தான் உள்ளது.

கொள்கைத் தெளிவு எப்போது?

ஒன்றிய பா... அரசின் மாநிலச் சுயாட்சி பற்றிய நடைமுறைகளை, கூட்டாட்சியை மதிக்காமையை, நிதிப் பங்கீட்டில் காட்டப்பெறும் பாகுபாட்டை... இன்னும் பல நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து சுட்டிக்காட்டி வருவதையும் நாம் தொடர்ந்து கண்டு வருகிறோம். ஒன்றிய அரசிற்கு எதிரான பரப்புரையைத் தொடர்ந்து மேற்கொள்வதையும் பாக்கிறோம். தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும் இந்த எதிர்ப்பை நாம் மதிக்கிறோம்.

ஒன்றிய அரசு திட்டமிட்ட வலுவான கொள்கையுடையது. அவ்வரசு முன்னெடுக்கும் ஒவ்வொரு திட்டத்திலும் ஏற்கெனவே வகுக்கப்பட்ட வகுப்புவாதக் கருத்தியலின் சாயல் இருக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. எடுத்துக்காட்டாக, ஒன்றிய அரசின் மாநில அரசுகள்மீது காட்டப்பெறும் பாகுபாட்டரசியலின் முழுமையான அரசியலை நாம் புரிந்துகொள்ள முனையவேண்டும். இன்றைய ஒன்றிய அரசின் அடிப்படையே சனநாயக மறுப்பு என்பதுதான்! சனநாயகம் குடிமக்களின் மாண்பை மதிப்பது, அதிகாரக் குவியலை மறுப்பது, அதிகாரப் பரவலை ஊக்குவிப்பது. இந்துத்துவம்ஒற்றையை நம்புவது, ஓர்மை மூலம் ஒருமைப்பாட்டைத் திணித்து ஒற்றுமையை உருவாக்க நினைப்பது. இந்துத்துவத்தின் ஒற்றை அரசியலில் மொழிவாரி மாநிலங்கள் என்பதோ, மொழிவழி மாநிலங்கள் (State) உருவானது என்பதோ இவர்களின் கொள்கைத் திட்டத்தில் இல்லை.

பாரதிய சனதாவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான எல்.கே. அத்வானி, ‘இந்த நாட்டின் அதிகாரம் குடியரசுத் தலைவரின் தலைமையில் அமையவேண்டும்; அமெரிக்க ஐக்கிய நாட்டினைப் போல் இந்தியக் குடியரசுத் தலைவர் மக்களால் தெரிவு செய்யப்படவேண்டும்என்று ஓயாமல் பரப்புரை செய்து வந்தார். ஒரு தலைவரை, குடியரசுத் தலைவரை முன்மொழிதலின் அரசியல் என்ன? ‘ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே சமயம்என்ற முழக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியாவில் குடியரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்படுபவர் யாரால், எந்தக் கூட்டத்தால் தெரிவு செய்யப்பட்டவராக இருப்பார்?

ஏற்கெனவே கூறியது போன்று இந்துத்துவம் இந்தியாவைப் பல மாநிலங்களாகப் பிரித்தமையையும், அதுவும் மாநிலங்கள் மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டமையையும் ஒற்றை இந்தியக் கொள்கைக்கு எதிரானது என்றும், இந்திய ஒருமைக்கு எதிரான நடவடிக்கை என்றும், இப்பிரிவுதான் இந்தியாவின் பல பகுதிகளில் பிரிவினை முழக்கத்திற்கு வழிவகுத்தது எனவும் பேசி வந்தனர் என்பதை இவர்களின் கொள்கை ஏடுகள் மூலம் அறியமுடியும்.

இந்தியக் கூட்டாட்சி முறையை மாற்றி ஒற்றை மய அரசை (Unitary type of govt) உருவாக்கத் துணிச்சலோடு முடிவெடுக்க வேண்டும். இந்த நாடு ஒன்று; இந்நாட்டின் மக்கள் ஒன்று! எனவே, நமக்கு வேண்டுவது ஒரே வகையான அரசாங்கமே. நிர்வாக வசதிக்காக இந்நாட்டினைப் பல்வேறு மண்டலங்களாகத் (Zone) தேவையாயின் பிரித்துக்கொள்ளலாம். இம்மண்டலங்கள் குறைந்த அளவுகளில் அல்லது எண்ணிக்கையிலும் அமையலாம். இதற்கேற்ப அரசமைப்பில் மாற்றம் கொண்டு வரலாம்.”

மாநில அளவிலான நிர்வாக முறைகள் அல்லது பகிர்வுகள் சனநாயக நடைமுறைக்கு உகந்தது என்று சிலர் வாதிடுவது எனக்குப் புரியவில்லை. சனநாயகத்திற்கும், பல்வேறு சட்டமன்றங்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. மத்தியில் அமையும் ஒரே அதிகார மையம் (Legislature) மட்டுமே போதும். பல மொழிகளைக் கொண்ட ஒரு மாநிலம், ஒரே மொழியைக் கொண்ட பல மாநிலங்கள் அமைவதில் தவறில்லை.

எஸ். கோல்வாக்கர், ‘Punch of thought பக். 250, 251.

இன்று இந்திய அரசு முன்னெடுக்கும் தொகுதி வரையறையை மாநிலச் சுயாட்சி என்ற அடிப்படையிலும், தென்னகம் - வட இந்தியா என்ற அடிப்படையிலும் பார்க்கின்ற பார்வையில் உண்மை இருக்கலாம். ஆனால், இன்றைய ஒன்றிய அரசினை வழிநடத்தும்ஒற்றைஎனும் சனநாயக அவமதிப்புக் கொள்கையை மக்களிடம் கொண்டு செல்லவேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

இந்தியாவின் பெருவாரி மாநிலங்களின் ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் இன்றைய ஆளும் அரசு, வெறும் எண்ணிக்கையால் மட்டும் பெரும்பான்மை (Majority) அல்ல; கருத்தியல் ரீதியாகவும்  ஒருவகையால் மழுங்கடிக்கப்பட்டவர்கள். இவர்கள் இக்கட்சியைச் சார்ந்த தீவிர உறுப்பினர்கள் மட்டுமல்லர்; அதிகாரப் பசியில் தம்மை இழந்தோரும் உள்ளனர்.

தமிழ்நாடு, தமிழர் மாண்பு, கூட்டாட்சி மறுப்பு என்ற பெயரில் தொகுதி வரையறைக்கு எதிராகப் பெரிய போராட்டம் ஒன்றினை தமிழ்நாடு முன்னெடுத்து வருகையில், இதனை ஒரு தேர்தல் பிரச்சினையாக்கும் முயற்சியில் மேனாள் தமிழ்நாட்டு முதல்வர், இந்திய உள்துறை அமைச்சரிடம் பேசியதாகவும், தமிழ்நாட்டிற்கு எந்தப் பாதிப்பும் இல்லையெனவும் கூறியதாகப் பேசி நிறைவு கொள்ளும் மனிதர்களை என்னவென்பது?

சரியான தருணம்

கண்ணில் தெரியும் இந்து தேசம் எப்படியிருக்கும்? என்பதற்கான அடையாளம் இன்றைய ஒன்றிய அரசின் துரித நடவடிக்கை.

தமிழ்நாடு காட்டும் எதிர்ப்பு, பாராட்டப் பெறவேண்டிய ஒன்று. குடிமக்கள் அனைவரும் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டிய ஒன்று. இப்பிரச்சினையை ஒரு தேர்தல்காலப் பிரச்சினையாக எடுத்துக்கொள்ளாமல், இந்துத்துவர்கள் முன்னெடுக்கும் இந்து தேசக் கட்டமைப்புக்கான தொடக்கப்பணி என்பதை நினைவில் கொள்வோம்.

இந்துத்துவர்களும், இந்துத்துவக் கருத்தியலாளரும் தேவைக்கேற்ப பயப்படுவதுபோலக் காட்டிக்கொள்வர் அல்லது தற்காலிகமாகப் பின்வாங்குவர். ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவுநர் டாக்டர் ஹெட்கேவரும், தொடர்ந்து வந்த குருஜி கோல்வாக்கரும் சிந்தையில் மொழிந்த எதனையும் இவர்தம் கொள்கையைக் காக்க உருவான இந்திய ஒன்றிய அரசும், அதன் ஏவல் நிறுவனங்களும் வழுவாமல் காத்து நிற்கும் என்பதே உண்மை.

news
சிறப்புக்கட்டுரை
கூண்டுக்கிளி (வலையும் வாழ்வும் – 43)

அந்தி சாயும் பொழுதில் வெண்மேகத்திற்குள் ஒளிந்து கொள்ளும் சிவப்பேறிய கதிரவன் போலப் பிரமிக்கத்தக்கதாய் இருந்தது சாந்தா பாட்டியின் பட்டையடிக்கப்பட்டிருந்த நெற்றியில் சிறிது கலைந்திருக்கும் சிவப்புநிற குங்குமப் பொட்டைப் பார்க்கும்போது.

சாந்தா பாட்டி படிப்பறிவில்லாதவள். அவளுக்கு ஊர் சென்னை-கரிமேடு குப்பம் என்றாலும் அவளின் பேச்சுத்திறனும் சாதுரியமான பதிலும் பலருக்கும் வியப்பாகவே இருக்கும். ‘பாட்டி நீயெல்லாம் அமெரிக்காவில் பிறக்கவேண்டிய ஆளாக்கும்; தெரியாம இங்க வந்து பிறந்திட்டியேஎன்று எட்டாம் வகுப்பு படிக்கும் சாந்தா பாட்டியின் பேரன் சிவக்குமார் எப்போதும் அவளைக் கிண்டலடிப்பான்.

சாந்தா பாட்டி எப்போதும் வீட்டிலிருப்பதில்லை. காலையிலேயே எழுந்து விபூதி, குங்குமம் சாத்திக்கொண்டு சுவரில் தொங்கிக்கொண்டிருக்கும் மஞ்சப் பையையும் கூண்டுக்கிளியையும் எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவாள்.

கிளி ஜோசியம் பார்ப்பது சாந்தா பாட்டி குடும்பத்தின் பாரம்பரியக் குடும்பத்தொழில். “டேய், நான் செத்துப்போயிட்டேனா நம்ம பாரம்பரியமும் செத்துப் போயிடும். நீயாவது கொஞ்சம் இத கத்துக்கடேஎன்று எப்போதும் பேரன் சிவக்குமாரிடம் சொல்லிக் கொண்டே இருப்பாள் சாந்தா.

சிவக்குமார் விளையாட்டுப் பையன். அவனுக்குத் தெரு கிரிக்கெட்டும், வீதிக்கடைப் பரோட்டாவும்தான் முக்கியம். குறும்புத்தனமாக எப்போதும் சாந்தா பாட்டியை வம்பிழுத்துக்கொண்டே இருப்பான்.

சிவக்குமாரைக் குற்றம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ‘காலம் கெட்டுப்போச்சு; அதான் நீயும் கெட்டுக்கிடக்கஎன்று சாந்தா பாட்டி பேரனை வையாது, அப்படியே கடந்துபோய்விடுவாள்.

சென்னை மெரினா கடற்கரையோரம் வரிசையாக அமர்ந்து கூறுவைத்து மீன் விற்கும் பெண்களைப்போல கூண்டுக்கிளி வைத்துக்கொண்டு எதிர்காலத்தை விற்றுக்கொண்டிருந்த சோசியக்காரர்களோடு சேர்ந்து எதிர்காலத்தை விற்றுக்கொண்டிருந்தாள் சாந்தா பாட்டி.

அன்று என்னவோ வழக்கம்போலக் கூட்டம் கூடவில்லை. மெரினா பீச் அலைகளும் சோம்பல் முறித்துக்கொண்டிருந்தன. எதிர்காலம் பற்றிய வியாபாரம் போணியாகவில்லை. கூண்டுக்கிளிகளும் தோகையினை விரித்து வைத்துக்கொண்டு கூந்தல் காய்ந்துகொண்டிருந்தன.

வெள்ளைக்காரன் ஒருவன் கூண்டுக்கிளியையும், கூன்விழுந்த பாட்டிகளையும் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டு சாந்தா பாட்டிக்கு முன்பாக வந்து உட்கார்ந்து கொண்டான்.

வாட் இஸ் திஸ்?” என்று கேட்டான்.

ஜோசியம்என்றாள்.

ஜீசஸ்என்றான் அவன்.

ஜீசஸ் நோ... ஜோசியம்என்றாள் சாந்தா பாட்டி.

ஏதேதோ கையிலும் வாயிலும் சொல்லிப் பார்த்தாள் பாட்டி. அந்த வெள்ளைக்காரனுக்கு ஒன்றும் புரியவில்லை. சிறிது நேரப் போராட்டத்திற்குப் பிறகு அலையில் அடித்துவரப்பட்ட ஒற்றைக்கால் செருப்புபோல பேரன் சிவக்குமார் அங்கு வந்து சேர்ந்தான். விடுமுறையென்பதால் பாட்டிக்கு மதிய உணவு கொண்டு வந்திருந்தான்சிவக்குமாருக்குத் தெரிந்திருந்த கொஞ்சநஞ்ச இங்கிலீஸ் சாந்தா பாட்டிக்கு உதவியாக இருந்தது. பல நேரக் காத்திருப்பிற்குப் பிறகு கூண்டுக்கிளி முதன்முறையாகத் திருமணமாகி வீட்டைவிட்டு வெளியே வரும் புதுமணப் பெண்ணைப் போல நாணத்தோடு வெளியே வந்தது. அதன் முன் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்ற அட்டைகளில் ஒன்றை எடுத்து சாந்தா பாட்டியின் பக்கம் வீசி விட்டு, அதே நாணத்தோடும் நளினத்தோடும் கூடு புகுந்தது.

பெரும் ஆவலோடு வெள்ளைக்காரன் விழிப் பிதுங்கிப் பார்த்துக்கொண்டிருந்தான். அட்டைக்குள் இருக்கும் படத்தை சாந்தா பாட்டி இலாவகமாகக் குங்குமச் சிமிழைத் திறப்பதுபோலத் திறந்துகாட்டினாள். உள்ளே ஒன்றுமில்லாமல் வெறுமையாக இருந்தது. சாந்தா பாட்டி அட்டையைக் குலுக்கி குலுக்கிப் பார்த்தாள். ஆனாலும், அவள் எதிர்பார்த்த படம் அந்த அட்டை கூட்டிற்குள் இல்லை.

சாந்தா பாட்டியால் ஓரளவிற்கு என்ன நடந்திருக்கும் என்பதை யூகிக்க முடிந்தது. அருகில் அமர்ந்திருந்த தன் பேரன் சிவக்குமாரை வெறித்துப் பார்த்தாள். அவன் ஒன்றும் தெரியாததுபோலக் குறும்புத்தனமாக அலைகளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சாந்தா பாட்டியின் சிவப்புப் பொட்டு வியர்வையில் நனைந்து கலைந்திருந்தது. அவளுடைய பார்வையிலும் கொஞ்சம் கூன் விழுந்திருந்தது. வெள்ளைக்காரனுக்கு எதிர்காலத்தைச் சொல்ல விரும்பியவள் வெற்று அட்டையைக் கண்டு திகைத்துப்போய் இருந்தாள். ஆனாலும், ஏதாவது சொல்லவேண்டும் என்பது சோதிடத்தின் சம்பிரதாயமாம்!

ஒரு பெரும் மூச்சை இழுத்துவிட்ட சாந்தா பாட்டி வெள்ளைக்காரனின் பழுப்பு நிறக் கண்களை உற்றுப்பார்த்துச் சொன்னாள்:

உங்க கலரைப்போல உங்க மனசும் வெள்ள சாமி. வெற்று அட்டை உங்க வாழ்க்கைய சொல்லுது சாமி. உங்களுக்கென்று யாரும் இல்ல சாமி. நீங்க தனிக்கட்ட சாமி. கொஞ்ச காலம் நீங்க ஒவ்வோர் இடமா சுத்திக்கிட்டே இருப்பீங்க சாமி. இது கொஞ்ச காலம்தான்; அதுக்கப்புறம் நீங்க மகாராஜனா வாழுவீங்கஎன்று சொல்லச் சொல்ல பேரன் சிவக்குமார் தனக்குத் தெரிந்த இங்கிலீசில் வெள்ளைக்காரனுக்கு மொழிபெயர்த்துச் சொல்லிக்கொண்டிருந்தான்

வெள்ளைக்காரன் மிரண்டு போனான். ‘எப்படி இந்தப் பாட்டிக்கு இதெல்லாம் தெரிந்தது?’ என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.

தன் பர்சிலிருந்து ஐந்நூறு ரூபாய் தாள் ஒன்றை எடுத்துக்கொடுத்துவிட்டு மனநிறைவாகச் சென்றான் அந்த வெள்ளைக்காரன்.

சாந்தா பாட்டி தனக்குக் கிடைத்த ஐந்நூறு ரூபாயைக் கண்களில் ஒற்றிக்கொண்டாள். தன் பேரனைஅட நாயே! எத்தனை வாட்டி சொல்லிருக்கேன். அந்த இயேசு நாதர் படத்தை அந்த அட்டையில இருந்து எடுக்காதணுஎன்று சொல்லிக் கொண்டே தன் கையில் இருந்த கட்டையால் அவன் தலையில் ஓங்கி ஓர் அடி வைத்தாள் சாந்தா பாட்டி. வலியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பாட்டியைத் திட்டிக்கொண்டே அந்த இடத்தை விட்டு ஓடி மறைந்தான் சிவக்குமார்.

கிறிஸ்மசுக்காக அந்த இயேசுநாதர் படத்திற்குப் பின்னால்ஹாப்பி கிறிஸ்மஸ்என்று கலர் பென்சிலால் எழுதி தன் வகுப்புத் தோழன் பிரான்சிஸ்சுக்கு கொடுத்திருந்தது அவனுக்கு மட்டும்தான் தெரியும்.

இந்தியாவில் சுமார் 83% மக்கள் நல்ல நேரத்தைப் பார்த்த பிறகே ஒரு நல்ல காரியத்தைச் செய்கின்றனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த நல்ல நேரம் பார்க்கும் முறை அல்லது சோதிடம் பார்க்கும் முறை மாறிக்கொண்டே வருகின்றது. அதன் அடிப்படையில் இன்றைய வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் இணைய சோதிடமும் சமூக ஊடகச் சோதிடர்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர். ‘Global Astrology Market Report - 2023’ என்னும் ஆய்வின்படி 2021 - ஆம் ஆண்டு வரையில் இணையவழி சோதிடம் 12.8 மில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டியுள்ளது என்றும், இதுவே 2031-ஆம் ஆண்டிற்குள் 22.8 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டும் என்கிறது.

அஸ்ட்றோ டாக், அஸ்ட்டோ குரு, அஸ்ட்ரோ யோகி, அஸ்ட்றோ சேஜ், இன்ஸ்டா அஸ்ட்றோ போன்ற சமூக ஊடகப் பக்கங்கள் இன்று இளையோரிடம் கூட மிகப் பிரபலமாக உள்ளன. டிஜிட்டல் உலகில் சோதிடம் ஒரு வணிகமாக மாற்றப்படுவதால் பல்வேறு மோசடிகள் நிகழ்வதோடு, பயனர்களின் தனிப்பட்ட தரவுகளும் களவாடப்படுகின்றன. பயனர்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சோதிடச் செயலிகளின் நவீன வடிவமைப்பு இளையோரை மட்டுமல்லாமல், குழந்தைகளையும் வெகுவாக ஈர்க்கின்றன.

செயற்கை நுண்ணறிவு மற்றும் அல்காரிதப் புரிதல்களோடு குறிப்பிட்ட பயனர்களுக்கு ஏற்ப வழங்கப்படும் அறிவுரைகளும், எதிர்கால முன்னறிவிப்புகளும் தொழில்நுட்ப உலகில் வியப்பை ஏற்படுத்தினாலும், சோதிடச் சேவைகளின் உண்மைத்தன்மை கேள்விக்குட்படுத்தப்படுவது அவசியம்.

news
சிறப்புக்கட்டுரை
பென்னிக்ஸ் - ஜெயராஜ் கொலைக்கு நீதி! ‘வானளாவிய அதிகாரம்’ வழிக்கு வந்தது!

திருவாளர்கள் பென்னிக்ஸ், ஜெயராஜ் வழக்கில் கடந்த 06.04.2026 அன்று வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு தமிழ்நாடு காவல்துறையின் அடக்குமுறையின் கோரத்தையும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி எந்த எல்லைக்கும் போக முடியும் என்ற குரூர / மனப்பிறழ்வான எண்ணத்தையும் அடித்து நொறுக்கித் தகுந்த பாடம் புகட்டியுள்ளது.

எங்கிருந்து தொடங்குவது?

பென்னிக்ஸ் - ஜெயராஜ் கடை நடத்திய இடத்தில் அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் நடந்த வாக்குவாதத்தில் இருந்து தொடங்குவதா? அல்லது அவர்களது கொடூர மரணத்திலிருந்து தொடங்குவதா? அல்லது இதையெல்லாம் பெரிதுபடுத்தாத அரசியல் தலைமை மற்றும் அதிகாரிகளின் கையாலாகாத்தனத்திலிருந்து தொடங்குவதா? என்றால்... சற்றே குழப்பம் ஏற்படுகிறது. இங்கே சற்றுத் தடிமனான வார்த்தைகளை நான் பயன்படுத்துவதைத்  தவிர்க்க முடியவில்லை. ஏனென்றால், அத்தகைய கொலை பாதகச்செயலைச் சாதாரண வார்த்தைகளால் விவரித்தால் அது சரிவராது. என்னைப் பொறுத்தருள்க!

மனிதர்களின் சமூக நிகழ்வுகள் பற்றிய நினைவு பொதுவாகச் சிறிது காலமே என்பதை ஏற்றுக்கொண்டாலும், நீதி நின்று நிலைக்கும் என்பதைத்தான் ஏறக்குறைய ஆறு வருடங்களுக்குப் பின் கிடைத்த நீதிபதி முத்துக் குமரனின் நீதிமன்றத் தீர்ப்பானது நமக்கு நிரூபித்துள்ளது.

2020-ஆம் ஆண்டில் கோவிட்-19 பேரிடர் பெருந்தொற்றால் உலகமே சின்னாபின்னமாகிச் செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருந்த வேளையில், கடையை மூடவேண்டிய விதிமுறைகளைச் சரியாகக் கடைப்பிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டோடு இவர்களுடன் ஆரம்பித்த இந்தச் சண்டையானது ஒரு வன்முறை வெறியாட்டமாகி, கொடூரமான முறையில் அவர்கள் அடித்துக் கொல்லப்பட்டதும், மதுபாட்டில்கள் உடலில் சொருகப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்ட இரத்தக் காட்டேரித்தனமான இந்தக் காவல்நிலையக் கொலையானது இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் நம்மால் செரிக்க முடியாத ஒன்று.

மேற்கூறியவை நாகரிகம் கருதி சொல்லப்பட்ட ஒரு சுருக்கமான பதிவு மட்டுமே. குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட பத்துப் பேர்களில் ஒருவர் இறந்து போய்விட, மற்ற ஒன்பது பேருக்கும் இரட்டை மரண தண்டனை தீர்ப்பும், மூன்றரைக் கோடிக்கு நெருங்கிய குற்றவாளிகளின் ஒட்டுமொத்த அபராதத் தொகையும், 21 ஆண்டுகள் தொடங்கி 8 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் இந்திய வரலாற்றிலேயே நீதிமன்றத் தீர்ப்புக்கென ஒரு புதிய அத்தியாயத்தைப் பிறப்பித்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, தமிழ்நாட்டில் காவல்துறையின் மதிப்பினை முழுக்க முழுக்கக் குறைத்து மதிப்பிட முடியாது என்பதையும் இவ்வேளையில்  நினைவிற்கொள்ளவேண்டும். அவர்களது தொடர்பணி மட்டுமே சமூகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்ட முடியும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒருபுறம், வேலைப்பளுவின் அழுத்தம் அவர்களைத் தொடர்ந்து வாட்டிக் கொண்டிருக்க, குடும்ப உறவுகளுக்குச் சரியாக நேரம் ஒதுக்க முடியாமல் எந்நேரமும் கடமையாற்றக் கூடிய சூழல்கள் அவ்வப்போது பெருகிக்கொண்டிருக்க, இதைக் குறித்த ஒரு சமூகநல வழக்கு (Pil) தொடரப்பட்டு, நீதிமன்றம் காவல்துறைக்கான சிறப்பு வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்துத் தந்து அதை அனைத்துக் காவல்நிலையங்களிலும் அறிவிக்கையாக ஒட்டப்பட்டு மக்கள் பார்வையில் வைக்கப்பட வேண்டும் என்பதும் அவசியமானது.

அந்த அறிவிக்கையில் குற்றவாளியெனக் கருதப்படும் ஒவ்வொரு குடிமகனுக்குமான உரிமைகள் என்னென்ன என்பதையும், அதை மீறும் வேளையில் காவல்துறையின் மேல் நடவடிக்கை எடுக்க முடியும் என்பது பற்றிய சட்டவிதிகளையும் எழுதி வைக்கும் வேளையில், காவல்துறையினரின் எதேச்சதிகாரப் போக்கு கட்டுக்குள் கொண்டுவரப்படும். ஒவ்வொரு மருத்துவமனையிலும் நோயாளர்களுக்கான உரிமைகளும், மருத்துவமனை மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கான பாதுகாப்பும் தவறாமல் அறிவிக்கையாகப் பொருத்தப்பட்டுள்ளதை இதற்கான எடுத்துக்காட்டாகக் கொள்வோம்.

மேற்கூறியவை எல்லாம் மிகவும் அவசியமானவை என்பதை வளரும் சமூகம் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளும் வேளையில், காவல்துறையினருக்கான தமிழ்நாட்டின் மொத்த நிதிநிலை (Budget) 2025-26 என்பது 12,714 கோடி எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இரண்டு விழுக்காட்டிற்கும் குறைவாகவே கடந்த ஆண்டுகளில் அவர்களது பயிற்சிக்கென ஒதுக்கப்பட்டுள்ளது எனும்போது, அவர்களது பயிற்சிகளை இன்னும் ஆழப்படுத்தவும், அவர்களுக்கான மென்திறன் பயிற்சி (Soft skills training) மற்றும் உணர்ச்சி நுண்ணறிவு (Emotional Intelligence) வளப்படுத்தவும் மிக மிக அவசியம் என இந்த வேளையில் நாம் கருத வேண்டியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் வண்டலூரில் அமைந்துள்ள காவல்துறை பயிற்சிக் கல்வியகத்தில் உளவியல் தொடர்பான மேற்குறிப்பிட்ட பயிற்சிகளைக் கொடுக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றவன் என்ற முறையில், குறிப்பிட்ட இரண்டு பயிற்சிகளையும் பாசறை தொடர் பயிற்சியாகவும், பணியிடைப் பயிற்சியாகவும் காவல்துறையினருக்குத் தருவதை தமிழ்நாடு கருத்தில்கொள்ள வேண்டுமென முன்வைக்கிறேன்.

தகவல் தொடர்புத் திறன் (Communication Skills)

ஒருவர் எப்படிப் பேசவேண்டும்? எதைப் பேசக்கூடாது? எதைத் தவிர்க்கவேண்டும்? தனி நபரோடும் குழுக்களோடும், சமூகத்தின் பல்வேறு அமைப்புகளோடும், ஏன் அதிகாரிகளோடும் கூட எப்படிக் கருத்துகளை உரையாடலில் முன்வைக்க வேண்டும்? என்றும், உரையாடல் வழி தீர்வுகளை நோக்கி நகரும் நற்பயிற்சியைப் பெற்றுகொள்வது இதில் மிகவும் தலையானது என்பது கேட்பார்திறன் (listening skills).

உணர்ச்சி நுண்ணறிவு (Emotional Intelligence)

இதில் தன்மேலாண்மை (Self management), தன் விழிப்புணர்வு (self awareness), சமூக விழிப்புணர்வு (Social Awareness) மற்றும் உறவு மேலாண்மை (Relationship Management) வலியுறுத்தப்படவேண்டும்மேற்குறிப்பிட்ட இரண்டு பயிற்சிகள் மட்டுமே எல்லாப் பிரச்சினைகளுக்குமான தீர்வு என்று இங்கே முன்வைக்க வரவில்லை. ஒருவரின் குடும்ப வளர்ப்பு, இளமைக்காலம், குழந்தைப்பருவ பெற்றோர் / காப்பாளர்களின் மதிப்பீடுகள், சந்திக்கக்கூடிய பேரிழப்புகள், குடும்ப வன்முறை போன்ற ஒரு தனிமனிதரின் வாழ்வில் மறையாத - அழிந்திடாத வடுவாக இருக்கும் வேளையில், இப்பயிற்சிகள் சற்றேனும் அவர்களது வாழ்வை மாற்றிக்கொள்ளும் வழியாக அமையக்கூடும் என்பதைச் சிறிதளவேனும் நம்பலாம் அன்றோ!

முடிவாக, பென்னிக்ஸ் - ஜெயராஜ் காவல் நிலைய மரண வழக்கில் தமிழ்நாடு காவல்துறைக்கு ஏற்பட்டுள்ள இந்தக் களங்கத்தைப் போக்கக்கூடிய அளவில், இனி தொடரும் எவ்வித வழக்குகள் ஆனாலும் அதில் கைது செய்யப்படும் குற்றவாளிகளை மனிதாபிமானத்தோடு நடத்தவும், அவர்களது தனிநபர் உரிமைகளை மதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டியதை, தமிழ்நாடு காவல்துறை பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும் என்பதை, இந்தச் சமூகம் மிகுந்த அக்கறையுடன் பார்க்கிறது.

news
சிறப்புக்கட்டுரை
மயக்கமும் கலக்கமும்

சமூக ஊடகங்கள் எளிய மனிதர்களின் கருத்தையும், கருத்துச் சுதந்திரத்தையும் குடியாட்சி மாண்பாகப் பிரதிபலிக்கின்றன. தமிழ்நாட்டில்விர்ச்சுவல் வாரியர்என்ற பெயரில் சிலர் மின்னணுத் தளத்தில் தெருச் சண்டை போடுகிறார்கள். ‘தாய்மொழியான தமிழில் இவ்வளவு அருவருக்கத்தக்க வார்த்தைகளா?’ என  அதிர்ச்சி  அளிக்கிறது.

இவர்கள் பதிவிடும் தகாத வார்த்தைகள் ஒட்டுமொத்த சமூகத்தையே முகம் சுளிக்கச் செய்கிறது. ஒரு காலத்தில் குழாயடிச் சண்டைகள் என்ற பெயரில் நடந்த ஆபாச வார்த்தைகள், உறவு முரண்களை இவர்கள் இணையத்தில் சில்லறைகளாய் சிதற விடுகிறார்கள்ஐந்து விழுக்காடாக இருந்த இந்தக் கேவலங்கள் இன்று இவர்களால் 95 விழுக்காடாக உயர்ந்துவிட்டது.

இரசிகர்கள் தங்கள் தலைவருக்குப் போட்டியாகக் கருதும் ரஜினி, அஜித், சீமான் எனத் தொடங்கி  தமிழ்நாட்டு முதல்வர் வரை வசை பாடுகிறார்கள். இந்த அமைப்பின் இவர்களது தேர்தல் பிரிவுச் செயலாளர் உச்சபட்சமாக முதல்வரைமுட்டாள்எனத் திட்டுகிறார். முதல்வரது அரசியல் வாழ்க்கையின் அனுபவத்தின் நிகர், இவர் எவருக்கும் வயதோ, தகுதியோ, பொது வாழ்வோ கிடையாது. ஒருவர் விடாமல் அத்தனை பேரையும் குறிவைக்கும் இவர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினியையும் சீண்டினார்கள். ரஜினிகாந்த்  அழகாக அவரது வழியில் பதில் சொன்னார்: ‘காலம் பேசாது; காத்திருந்து பதில் சொல்லும்.’

சமூக ஊடகங்களில் பிம்ப அரசியல் குறித்து அக்கறை  கொள்ளும் ஒருவர் ஒரு கருத்தைப் பதிவு செய்கிறார். அடுத்த நொடி முதல் இந்தக் கூட்டம் கூடு கலைந்த தேனீக்களாய் மாறி வெறிக்கொண்டு தகாத வார்த்தைகளை வாரி இறைக்கிறது. இது சாதாரண குடிமகன்

முதல் பெரிய பிரபலங்கள் வரை எல்லாருக்கும் நடக்கும். அவர்களின் ஒரே நோக்கம் மீண்டும் அக்கருத்தாளர் சமூக ஊடகப் பக்கம் வந்து, அவர்களைப் பற்றி விமர்சனங்கள் செய்யக்கூடாது என்பதாகும். இதை அவர்கள் தலைமை இரசிக்கிறது. இதுவரை கண்டிக்கவும் கட்டுப்படுத்தவும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ‘வார் ரூம்என்ற பெயரில் உள்ளடக்கங்கள், கற்பனைவாதக் கருத்தாக்கங்கள் தலைமை சக்தியிடமிருந்து பகிரப்படுகிறது.

அரசியல் கட்சிகளில் கண்ணியமில்லாத பேச்சு, தரக்குறைவான தாக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும். ஆபாசம், என்று கவனம் விமர்சனம் பெறுகிறதோ அது கண்டிக்கப்படும். வழக்குப் பதிவு செய்யப்படும். அரசியல் கட்சியிலிருந்து நீக்கப்படுவர். ஆனால், இந்தக் குறிப்பிட்ட கட்சியால் மட்டுமே தலைவரால், தலைமையால் கண்டிக்கப்படாது இரசிக்கப்படும். கரூர் பெருந்துயரச் சம்பவத்தின் போது ஒரு பதினைந்து வயது சிறுவன் கூறுகிறான்: “எங்கள் தலைவர் மீது கை வைத்தால், தமிழ்நாடே பிளாஸ்ட் ஆகிடும், போலீஸ் ஸ்டேசனே இருக்காது.”

இவர்களுக்குச் சட்டம்-ஒழுங்கு குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லை. இவர்கள் தங்கள் தலைவரைப் போலவே கற்பனை உலகில் வாழ்கிறார்கள். இந்த வாரியர்ஸின் மறுபக்கம் வன்முறையைத் தூண்டும் வகையில் வீடியோ போடுவதில் போட்டி நடக்கிறது.

இரு இளைஞர்கள் கையில் அரிவாள் வீசிப் பேசுகிறார்கள்: “அறுத்திருவோம், மொத்த இரசிகர் கூட்டமும் சேர்ந்து வந்தால் நீங்க ஒருத்தனும் இருக்க மாட்டீங்கஎன்கிறார்கள். “ரெட் அன் பிளாக்கை அடித்து நொறுக்கிடுவோம்என வேறொருவன் வீடியோ போடுகிறான். மற்றொரு சமூக ஊடகக் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர் இந்த இரசிகர்களைத் தினமும் ஒரு வீடியோ போட்டு வம்புக்கு இழுத்தார்; இவர்கள் கட்சியில் ஆண், பெண் பட்டாளம் அவரைத் திட்டியது சொல்ல முடியாத, நாம் முதன் முதல் கேட்கும், புதிய கண்டுபிடிப்பு வார்த்தைகள்தாம்.

நாம் நாகரிகச் சமூகத்தில் வாழ்கிறோமோ அல்லது கற்காலத்திற்குத் திரும்புகிறோமோ என்ற அச்சம் எழுகிறது. இவர்கள் வெட்டரிவாள், பட்டா கத்தியோடு கோபமாகப் பேசுகிறார்கள். “டி.ஜி.பி., டி..ஜி., முதல்வர் எவர் எங்கள் தலைவரைப் பேசினாலும், மூஞ்சி கிழிந்துவிடும்எனச் சவால் விடுகிறார்கள்.

கரூர் பெருந்துயர நிகழ்வின்போது சவால் விட்டவர்களைக் காவல்துறை மடக்கிப் பிடித்தது. வழக்குகளைத் தொடுத்தபோது இந்தக் கூட்டம் அவர்கள் தலைவரைப் போல் தங்கள் சமூக ஊடகக் கணக்குகளை மூடிவிட்டு அலைப்பேசிகளை வீசி விட்டு, பதுங்கு குழிகளில் பதுங்கிக் கொண்டார்கள். நடுநிலை  விமர்சகர்கள், “இந்தச் சாக்கடைகள் மீது கல்லெறிந்து நாமும் நாற்றப்படவேண்டுமா?” எனக் கேட்கிறார்கள்.     

சமூக ஊடகங்களில் மோசமாக நடக்கும் இவர்களைப் பாதிக்கப்பட்ட  பொதுமக்கள் வெளிப்படுத்த வேண்டும். கொலைமிரட்டல் விடுகிறவர்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட, காவல்துறையில் வழக்குகள் பதிவு செய்யப்படவேண்டும்.

எதிர்க்கட்சியாக இல்லாமல், எந்த ஓர் ஆட்சி அதிகாரமும் இல்லாதபோது இவர்கள் தாங்கள் வைத்ததுதான் சட்டம் என ஆடுகிறார்கள். ஒரு வேளை இவர்கள் ஆட்சி அதிகாரம் பெற்றால், சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குரல்வளைகளை நசுக்கிவிடுவார்கள். இவர்களை  எதிர்த்து எவரும் பேச முடியாத அச்ச உணர்வு தமிழ்நாட்டில் ஏற்படும். இவர்களது வன்முறை வெறி, நாளைய நாள்களில் தமிழ்நாட்டை ஒரு பீகார், உத்தரப்பிரதேசம் போல் மாற்றிவிடும் என்பதே கவலைக்குரிய ஒன்றாகும்.

பொதுமக்களில் சிலர்மாற்றம்என்ற பெயரில் இந்த அருவெறுக்கத்தக்க வன்முறைக் கூட்டத்திற்கு ஆதரவு அளிப்பது, நாளைய நாள்களின் சமூக அமைதிக்கு விடுகிற பெரும் சவால் எனலாம். ஆட்சி அதிகாரம் நோக்கிய இவர்களது பயண காலமே, பொதுமக்களைப் பயப்படுத்துகிறது.

அண்மையில் வங்கதேச உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். வங்க தேசத்தில் ஜமாத்--இஸ்லாமி கட்சி இளைஞர்களால் பரபரப்பு செய்யப்பட்டது. அவர்களின்அடாவடித்தனம்வெகுவாகப் பேசப்பட்டது. அடுத்த ஆட்சி இவர்களது எனத் தொலைக்காட்சிகள், அச்சு, சமூக ஊடகங்கள்மக்களை  மூளைச் சலவை செய்தன. இந்த இளைஞர்களால் வங்கதேசம் சுபிட்சம் பெறும் என இளைஞர் கூட்டத்தைத் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டாடித் தீர்த்தார்கள். ஓநாய் கூட்டம் என மக்களிடம் வெறுப்பு பெற்ற  ஜமாத்--இஸ்லாமி கட்சி, வங்க தேசத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது.

சிறுபிள்ளைத்தனமான இந்த வாரியர்ஸ்க்கு  அடிப்படை விமர்சனங்களைத் தாங்கும் பொறுமை இல்லை. இவர்களால் கட்சித் தலைவருக்கு, கட்சிக்கு மக்களிடம் உள்ள புகழ் வெளிச்சம் பாதிக்கப்படுகிறது என்ற கவலையும் இல்லை. ரீல்ஸ்-ரீச் என்பதில் படம் காட்டுகிறார்கள். அவரது தலைவரை நேரில் காணும்போது, கும்பிடத் தோன்றாமல் அலைப்பேசி பிரேமுக்குள் அடக்கும் ஆர்வமும் வெறியும் வெளியாகிறது. இவர்கள் அலைப்பேசியே உலகம் என வாழ்கிறார்கள்.

எங்கள் பகுதியில் இவர்கள் வாக்கு கேட்டு வந்தார்கள்.  ‘ஏன் இவ்வளவு அவசரமாக வந்தார்கள்?’ என்றபோது சொல்கிறார்கள்: “இன்ஸ்டா மற்றும் பேஸ்புக்கில் போடத்தான்எனப் பொதுமக்களே விளக்குகிறார்கள்.

மாற்றம்என்ற பெயரில் மூளைச்சலவை செய்து, வாக்கு மாற்ற முயற்சி நடக்கிறது. சினிமா மோகம் என்ற புதைகுழியில் விழாதீர்கள். மாற்றம் என்ற பெயரில் நாற்றத்தைப் பூசிக்கொள்ளாதீர்கள். எந்த ஒரு கொள்கைப் பிடிப்பும், மக்கள் சேவை என்ற மாண்பும் கொள்ளாமல், முதல்வர் பதவி என்று அதிகார ஆசை கொண்டால், சமூக ஊடகங்களில் பொங்கலாம். அது பாலாக இருந்தால், நன்றாகப்  பொங்கும். இது பச்சைத் தண்ணீர்! எப்படிப் பொங்கும்?