news
இந்திய செய்திகள்
அருள்பணியாளரின் குறும்படம்

திருநங்கைகள் தினமான மார்ச் 31 அன்றுடிரான்ஸ்சென்டர்என்ற ஆவணப் படம் வெளியிடப்பட்டது. இது இந்தியாவின் முதல் திருநங்கை காவல்துறை அதிகாரியான கே. பிரித்திகா அவர்களின் பயணத்தை விவரிக்கிறது.

அருள்தந்தை எர்னஸ்ட் ரொசாரியோ .. இயக்கியுள்ள இந்த 28 நிமிட ஆவணப் படமானது திருநங்கை சமூகத்திற்கான சவால்களை எடுத்துக்காட்டுகின்றது. இந்த ஆவணப்படம்  பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

இந்தியாவிலுள்ள அறியப்பட்ட மொழிகளில் எழுத்துரு பெற்ற முதல் மொழி தமிழ்தான். அது ஆதாரப்பூர்வமாக  நிரூபிக்கப்பட்டது.  இப்பெருமையை நாம் கூறிக்கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால், உண்மையான பெருமைகளை உணராமல் இருப்பதும், இல்லாத பெருமைகளைத் திரும்பத் திரும்ப எடுத்துக்கூறுவதுமான ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தமிழ் இலக்கியம் நம் வளமை; நம்  பெருமை. பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் கற்றவர்களால்-கற்றவர்களுக்காக எழுதப்பட்டது. ஆனால், திருக்குறள் போன்ற நூல்கள் கற்றவர்களால் மற்றவர்களுக்காக எழுதப்பட்டது. பாரதியார் ஒருவரே சரியாக நம் உணர்வை வரிசைப்படுத்தினார்: ‘வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு, என் மொழி, என் இனம், என் நாடுஎன்று வரிசைப்படுத்தினார். இந்த வரிசை இருக்கும் வரை நாட்டுப்பற்று  குறையவே குறையாது. ஆகவே, இந்த வரிசை சரியாக இருக்க வேண்டும்.” 

- உயர்திரு. பாலச்சந்திரன் ... (ஓய்வு), எழுத்தாளர்பேச்சாளர்

தோற்றுப்போகாதே! படிப்பில் மட்டும் தோற்றுப்போகாதே! தோற்றுப்போனால், அடுத்தவர்கள் நினைப்பதுபோல்தான் நம் வாழ்க்கை அமையும். வெற்றியடைந்தால் நாம் நினைப்பதுபோல நம் வாழ்க்கையை வாழலாம். இப்போது அது புரியாது; இளம் வயதில் அது புரியாது. ஆனால், புரிந்தவர்கள் வெற்றி அடைகிறார்கள். வாழ்க்கையில் முன்னேறி, அதிகாரம் என்ற எல்லைக்குள் போய் பொருளாதாரத்தில் பெரியவர்களாக இந்த நாட்டையும் இந்தக் குடும்பத்தையும் காப்பாற்றுகின்ற அத்தனை ஆளுமைகளுக்கும் அடித்தளமாக அமைந்தது கல்வியே!”

- முனைவர் திருமதி. பர்வீன் சுல்தானா, கல்வியாளர்

கடவுள்கள் சரியாகத்தான் உள்ளனர். சில மனிதர்கள்தான் சரியாக இல்லை. தொல்லியல் துறையினர் மதுரை - திருப்பரங்குன்றம் மலை தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த மலை அனைவருக்கும் பொதுவானது.”

- நீதிபதிகள் எஸ். ஸ்ரீமதி, ஜே. நிஷாபானு, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

இந்தியா என்பது செழுமையான மொழிகளின் நிலமாகும். நாடாளுமன்றத்தில் கூட மக்களவை உறுப்பினர்களின் பேச்சு 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது.  தற்போது மொழிகள் விவகாரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றம் கவலை அளிக்கிறது. அனைவரையும் அரவணைத்துச் செல்வதன் அவசியத்தை நமது கலாச்சாரம் வலியுறுத்துகிறது. இந்திய நிலப்பரப்பில் மொழி தொடர்பான மோதல் போக்கு வேண்டுமா? நம் நாட்டின் மொழிகள் ஆழமான ஞானத்துடன் கூடிய இலக்கியச் சுரங்கத்தைக் கொண்டுள்ளன. ஒவ்வோர் இந்திய மொழியையும் வளர்க்க வேண்டியது அவசியம்.”

- உயர்திரு. ஜகதீப் தன்கர், குடியரசு துணைத் தலைவர்

ஒவ்வொரு மொழியையும் மாணவர்களிடம் திணிக்க முயற்சிப்பது அவர்களுக்குச் சுமையாகவே அமையும். இதைக் கல்வியாளர்கள்  உள்ளிட்ட அறிவியல் பார்வை கொண்ட பலரும் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கை வழியிலான அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளின் தரம் உயர்ந்தே இருப்பதை ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன. மாணவர்களின் மீது மொழித்திணிப்பு என்னும் சுமையை ஏற்றாமல், திறன் மேம்பாடு என்கின்ற வாய்ப்பை வழங்க வேண்டும். தமிழையும் பிற மொழிகளையும் அழிப்பதுதான் ஒன்றிய அரசின் இரகசியத் திட்டம். அதை வெளிப்படையாகவே தமிழ்நாடு எதிர்த்து நிற்கும்; வென்று காட்டும்.”

- மாண்புமிகு மு.. ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

மொழிக்கொள்கை என்பது வேறு, கல்விக் கொள்கை என்பது வேறு. மொழிக்கொள்கை என்பது அரசின் நிர்வாகத்தோடு தொடர்புடையது. மொழிக்கொள்கையை ஏற்காவிட்டால் நிதியை மறுப்பதும், விடுவிக்காமல் இருப்பதும் கண்டிக்கத்தக்கது. புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை அடிப்படையில் அமைந்துள்ள பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை ஏற்க மாட்டோம் என்கிற, இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடித்து வரும் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஏற்க மறுத்து, ஒட்டுமொத்த நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைப்பது ஏற்புடையது அல்ல; 2001- 2006 காலகட்டத்தில் நவோதயாப் பள்ளிகளைத் தமிழ்நாடு ஏற்க மறுத்தபோது, அப்போது இருந்த ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கான நிதியை நிறுத்தவில்லையே! இப்போது மட்டும் ஏன் இந்தப் பிடிவாதம்? இருமொழிக் கொள்கையில் .தி.மு.. உறுதியாக உள்ளது.”

- உயர்திரு. செம்மலை, மேனாள் கல்வி அமைச்சர்

news
இந்திய செய்திகள்
கிறித்தவர்கள் மீது தாக்குதல்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ள நிலையில், அவர்கள் தவக்காலத்தின்போது கிறித்தவர்களின் செபக்கூட்டங்கள் மற்றும் வீடுகளில் நடைபெறும் ஆன்மிக வழிபாட்டிற்குப் பாதுகாப்புத் தேவை எனக் கோரிக்கை வைத்துள்ளனர். 2024-ஆம் ஆண்டில், உத்தரப்பிரதேசத்தில் 209 கிறித்தவர் மீதான தாக்குதல்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

news
இந்திய செய்திகள்
தவக்காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி

கத்தோலிக்கத் திரு அவை தவக்காலத்தில் 10,000 மாற்றுத் திறனாளிகளுக்குகாரிதாஸ் இந்தியா  சமூக சேவை அமைப்பின் வழியிலும், டெல்லி அர்சபாகம் மற்றும் இந்தியத் துறவற அமைப்புகளின் ஒத்துழைப்புடனும்  மாற்றுத்திறனாளிகளுக்கான சிகிச்சை, ஆதரவு, உதவிப் பொருள்கள் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை வழங்கியுள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கல்வி, வேலை மற்றும் மருத்துவ சேவைகள் தடையின்றிக் கிடைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.


news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

ஒவ்வொருவருக்கும் அவரவர் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையில் யாரும் தலையிடக் கூடாது. இந்த நடைமுறையை அனைவரும் பின்பற்றினால் மத நல்லிணக்கம் துளிர்க்கும். மதத்தைக் கையில் எடுத்து அதற்கு எதிரான அரசியலை விதைப்பதால்தான் பிரச்சினை வருகிறது. இந்துகளிடம் இசுலாம், கிறித்தவ மதங்களைஅந்நிய மதம்என வேற்றுமைப்படுத்துகின்றனர். சிறுபான்மைச் சமூகத்தினர் மீது வெறுப்பை விதைக்கின்றனர். பிரித்தாலும் சூழ்ச்சியைப் பயன்படுத்தி ஆட்சியில் நீடிக்கப் பார்க்கிறது பா... சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டுமென்றால் மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வேண்டும்.”

- திரு. தொல் திருமாவளவன், மக்களவை உறுப்பினர், தலைவர் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

இந்தியாவில் பட்டப்படிப்பை நிறைவு செய்யும் இளைய தலைமுறையினருக்குத் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் தற்போது ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அதேவேளையில் பட்டச் சான்றிதழ் மட்டும் அந்த வாய்ப்புகளைப் பெற்றுத் தராது. திறன்கள் இல்லாத சான்றிதழ் வெறும் வெள்ளைத் தாளுக்குச் சமம். மாணவர்கள் தாம் தேர்ந்தெடுத்துள்ள துறையில் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள், கற்றுக்கொள்ள வேண்டிய தொழில் நுட்பங்கள் ஆகியவை குறித்து நன்கு புரிந்து கொண்டால், பயணிக்க வேண்டிய பாதை அவர்களுக்குத் தெளிவாகப் புலப்படும். திறன் மேம்பாட்டுக் கல்வி ஒரு நபரின் திறன்களை மேம்படுத்தி, அவரது இலக்குகளை அடைய உதவும்; அது சிறந்த வேலை வாய்ப்புகளையும் பெற்றுத்தரும்.”

- உயர்திரு. குமார் மொலுகரம், துணைவேந்தர் உஸ்மானிய பல்கலைக்கழகம்

வரலாற்றில் ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது ஒரு கருத்தியலும் உருவாக்கப்படுகிறது. கல்வி, கருத்தியல், தொழில்நுட்பம் ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. எப்போதும் மக்களிடையே ஒரு பிளவைத் தொழில்நுட்பம் தோற்றுவிக்கும்; அப்போது அங்கு அதிகாரம் உருவாகும். அதிகாரம் படைத்த அறிவுடையவர்கள் தொழில் நுட்பத்தைக் கையாண்டு வரலாற்றிற்கு நிலையான சான்றுகளை உருவாக்குகிறார்கள்.”

- முனைவர் திரு. வைகைச் செல்வன், மேனாள் அமைச்சர்