news
இந்திய செய்திகள்
“குழு உணர்வோடு பயணிப்போம்” - கர்தினால் பிலிப் நேரி

வெர்னாவில் உள்ள பாட்ரே கான்சிசாவ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கோவாவின் இந்தியத் துறவற சபைகள் கூட்டமைப்பின் (CRI) வெள்ளி விழாவில் கலந்துகொண்ட கர்தினால் அவர்கள் துறவற சபைக் குழுக்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதில் தங்களது ஈடுபாட்டை மேலும் ஆழப்படுத்த அழைப்பு விடுத்தார். மேலும், “நாம் சவாலான சூழலில் வாழ்கிறோம். கூட்டொருங்கியக்கத் திரு அவை என்பது அடிப்படையில் ஒரு பணியாற்றும் திரு அவைஎன்றார்.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

அரசக் குடும்பம், நீதிபதிகள் அல்லது நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களுக்காக நீதிமன்றங்களும் நீதித்துறையும் நாடாளுமன்றமும் இல்லை. அனைத்து மக்களுக்கும் நீதி வழங்கவே அவை உள்ளள. அந்த நீதி மக்களின் வீடுகளைத் தேடிச் செல்ல வேண்டும்; விரைவாகவும் குறைந்த செலவிலும் நீதி வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். நமது கலாச்சாரம், பாரம்பரியம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும். அவற்றைப் பாதுகாக்க வேண்டியது அரசமைப்புச் சட்டப்படி நமது கடமை. ஒவ்வொரு மதத்திற்கும் புனித நூல் உள்ளது. ஆனால், ஒவ்வோர் இந்தியருக்கும் அரசமைப்புச் சட்டம்தான் புனித நூலாகும். அதை நாட்டு மக்கள் அனைவரும் வாசிக்கவேண்டும்.”

- உயர்திரு. பி.ஆர். கவாய், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

காப்பியங்களை முழுமையாக ஆழ்ந்து படிக்கவேண்டும். மனிதராகப் பிறக்கும் அனைவருக்கும் நன்மை-தீமை என்ற கலப்புநிலை இருக்கும். இந்தக் கால இளைஞர்கள் எந்த ஒரு காப்பியத்தையும் முழுமையாகப் படிக்காமல் தீயவை இருப்பதாகக் கூறுகின்றனர். காப்பியங்களை எழுதியவர்கள் தீயவற்றைக் கூறுவதே இல்லை. காப்பியத்தில் தீமை இருப்பதுபோல தோன்றினாலும், ஆழமாகப் படித்தால் அதிலிருக்கும் உண்மைக் கருத்து விளங்கும்.”

- திரு. இலங்கை ஜெயராஜ், ஆன்மிகச் சொற்பொழிவாளர்

பகல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் மோதலை வர்த்தகத்தை முன்வைத்து நான்தான் முடிவுக்குக் கொண்டுவந்தேன் எனத் தொடர்ச்சியாகக் கூறிவரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போது இந்தியப் பொருள்களின் மீது 25% வரி விதித்திருக்கிறார். இந்தியா - இரஷ்யா பொருளாதாரம் சிதைந்து போய்விட்டால் இரு நாடுகளின் பொருளாதார வளம் முற்றிலுமாக அழித்தொழிக்கப்படும் என்பதற்கான இந்த மிரட்டல் போக்கில் டிரம்ப் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியையும் 140 கோடி மக்களும் விழிப்போடு எதிர்கொள்ள வேண்டும்.”

- முனைவர் வைகைச் செல்வன், மேனாள் அமைச்சர்

news
இந்திய செய்திகள்
வன்முறையால் பாதிக்கப்பட்டு மணிப்பூரில் இடம்பெயர்ந்தோருக்கு 20 வீடுகள்

இம்பால் மறைமாவட்டம் சிங்காட்டில் உள்ள புனித தாமஸ் ஆலயத்தில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்காகப் புதிதாக 20 வீடுகளைக் கட்டி திறந்துள்ளது. இந்த வீடுகள் மே 2023-இல் மெய்தி மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே வெடித்த இன வன்முறையால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. புனித தாமஸ் ஆலய அருள்தந்தை அதனாசியஸ், “பதவியேற்புக்குச் சற்று முன்பு வானத்தில் ஒரு வானவில் தோன்றியது, இது புயலைத் தொடர்ந்து எழும் நம்பிக்கை, புதிய தொடக்கங்கள் மற்றும் தெய்வீக உறுதிப்பாட்டின் சக்திவாய்ந்த அடையாளமாகும்என்று பகிர்ந்துகொண்டார்.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

பஹல்காமில் பைசரன் பள்ளத்தாக்குப் பகுதிக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் செல்வதை அரசு அறிந்திருக்கவில்லையா? அந்தப் பகுதியில் எந்தவிதப் பாதுகாப்பும் போடப்படாதது ஏன்? ஏன் அந்த மக்கள் கைவிடப்பட்டனர்? பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், மத்திய அரசு மற்றும் உளவுத்துறையின் மிகப்பெரிய தோல்வி. இதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்? மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா பதவி வகித்து வரும் நிலையில் மணிப்பூர் பற்றி எரிந்தது; தில்லி கலவரங்கள் நிகழ்ந்தன; தற்போது பஹல்காம் தாக்குதல். கடந்த 2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு 25 தாக்குதல்கள் நடந்துள்ளன. பொதுமக்கள் மட்டுமின்றி வீரர்களும் உயிரிழந்துள்ளனர். இத்தகைய தொடர் உள்நாட்டுப் பாதுகாப்புத் தோல்விகள் நடைபெற்றபோது, அவர் இராஜினாமா செய்யாமல் தொடர்ந்து பதவி வகித்து வருகிறார். பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இடம் கொடுத்த பாதுகாப்பு குறைபாடுக்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகுவாரா?”

- திருமதி. பிரியங்கா காந்தி, மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்

தமிழ்நாட்டைச் சனாதனமயப்படுத்த பா... துடிக்கிறது. இங்குள்ள கட்சிகளுடனும் சாதிய மதவாத அமைப்புகளுடனும் பா... இணைந்து செயல்படத் தொடங்கிய பிறகுதான் சாதியின் பெயரில் வன்முறைகள், கொலைகள் அதிகரித்திருக்கின்றன. சாதியக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டம் இயற்ற பா... ஆர்வம் காட்டவில்லை. தமிழ்நாடு அரசு எச்சரிக்கையாக இருந்து, வெறுப்பு அரசியலைப் பரவவிடாமல் தடுக்கவேண்டும்.\"

- திரு. தொல். திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி

ஒவ்வொரு மாநிலத்திலும் காவல்துறைக்கு எனமாநிலப் பாதுகாப்பு ஆணையம்என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இந்த ஆணையம்தான் காவல்துறையை வழிநடத்த வேண்டும். இந்த ஆணையம் காவல்துறையின் செயல்பாடுகளைக் கண்காணித்து, முறைப்படுத்தி நடுநிலையோடு செயல்பட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். அச்செயல்பாடுகளை அறிக்கையாகச் சட்டமன்றத்தில் சமர்ப்பித்து, விவாதிக்க வழிவகுக்கும். இந்த ஆணையத்தின் அறிக்கையைச் சட்டமன்றம் முழுமையாக ஏற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டும். மாநிலக் காவல்துறையின் அமைச்சர் இந்த ஆணையத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பார்; எனினும் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது. இந்த ஆணையத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஒரு முக்கியமான உறுப்பினராக இருப்பார். உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரும், மாநிலத் தலைமைச் செயலாளரும், மாநிலக் காவல்துறை தலைவரும் உறுப்பினர்களாகச் செயல்படுவர். மேலும், மதிப்பும் கண்ணியமும் கொண்ட அரசியல் சாராத பொதுமக்கள் மூன்று அல்லது ஐந்து பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இந்த ஆணையம்தான் காவல்துறையை நடத்த வேண்டும் எனும் நிலை ஏற்பட்டால், காவல்துறை தன் பணிகளைத் தன்னிச்சையாகச் செய்ய வாய்ப்புகள் அதிகம்.”                              

- உச்ச நீதிமன்றம்

news
இந்திய செய்திகள்
பொய்க்குற்றச்சாட்டுகளின் பேரில் அருள்சகோதரிகள் கைது!

சத்தீஸ்கரில் உள்ள  துர்க் நகரில் மனித வர்த்தகம் மற்றும் மதமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டில், அமல அன்னையின் அசிசி அருள்சகோதரிகள் சபையைச் சேர்ந்த வந்தனா பிரான்சிஸ், ப்ரீத்தி மேரி என்னும் இரண்டு அருள்சகோதரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இந்திய அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்து தேசியவாத உணர்வோடு செயல்படும் பா... தலைமையிலான ஒன்றிய அரசு, சிறுபான்மையினருக்கு எதிராக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். கிறித்தவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகளையும், மதமாற்றத் தடைச்சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துவதையும் சுட்டிக்காட்டி, கேரளக் கத்தோலிக்க ஆயர் பேரவையும், இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.

news
இந்திய செய்திகள்
கேரளாவில் மறைந்த மேனாள் முதல்வருக்கு தலத்திரு அவை அஞ்சலி!

கேரளாவின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும், மேனாள் மாநில முதல்வருமான வி.எஸ். அச்சுதானந்தன் தனது 101 வயதில் மரணித்தார். அவரது மறைவுக்குக் கேரளக் கத்தோலிக்க ஆயர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை கேரள மாநிலத்தின் முதல்வராகப் பணியாற்றிய வி.எஸ். அச்சுதானந்தன் அவர்கள், சமூக நீதி, ஊழலை எதிர்த்துப் போராடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களின் நலனுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தார் என்றும், தனது 80 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராகவும், பொதுமக்களின் தலைவராகவும், அரசியல் பிளவுகளைத் தாண்டி, அசைக்க முடியாத கொள்கைப் பிடிப்புள்ளவராகவும் உருவெடுத்தார் என்றும் சீரோ-மலபார் கத்தோலிக்க வழிபாட்டு முறை கத்தோலிக்கத் திரு அவையின் தலைவர் ஆயர் இரபேல் தட்டில் அவரைப் பாராட்டியுள்ளார்.