news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

சட்டம் என்பது வெறும் பட்டம் பெறுவது மட்டுமல்ல; சட்டத்தின் ஆளுமை பற்றிய ஆழ்ந்த அறிவைப் பெறுவதே சட்டக்கல்வியின் உயரிய நோக்கம். விடாமுயற்சி, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, ஒழுக்கம், நிலைப்புத்தன்மை ஆகியவை இக்கால வழக்கறிஞர்களுக்குத் தேவை. இந்திய அரசியல் சாசனம், அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான கருவூலமாக உள்ளது. நீதிபரிபாலனச் சமத்துவம், சகோதரத்துவம், நீதிநெறி என்பதே பல வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாகத் திகழ்கிறது.”

- உச்ச நீதிமன்ற நீதிபதி கோட்டீஸ்வர் சிங்

எந்த அளவுக்கு அறிவார்ந்த தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றனவோ, அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் தேவையற்ற குப்பையும் இருக்கின்றன. நாம்தான் குழந்தைகளுக்குச் சரியானதை அடையாளம் காட்ட வேண்டும். எதற்கெடுத்தாலும் தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பி இருக்கின்ற தலைமுறையாக மாணவர்கள் மாறிவிடக்கூடாது. தொழில்நுட்பத்திற்கும் மனித சிந்தனைக்குமான வேறுபாட்டை உணர்த்தவேண்டும். அறத்தின் வலிமையையும் நேர்மையின் தேவையையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும். பாடப்புத்தகங்களைக் கடந்து, இலக்கியங்களை, பொது அறிவுத் தகவல்களை, சமூக ஒழுக்கத்தை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வை, காலநிலை மாற்றம் குறித்த தெளிவை, மாற்று எரிசக்திகளின் தேவையைப் பற்றியெல்லாம் புரியவைக்க வேண்டும். கல்வி தொடர்பாகச் செய்யும் பணிகளைத் தாண்டி, மாணவர்களுக்குள்ளே சமத்துவம், சமூகநீதியின் தேவையைப் பற்றி எடுத்துச்சொல்லுங்கள். மாணவர்களிடம் அடிக்கடி மனதுவிட்டு பேசுங்கள். நூலகங்களையும் வாசிப்புப் பழக்கத்தையும் அறிமுகப்படுத்துங்கள். அதற்கு, ஆசிரியர்கள் முதலில் படித்துக் கொண்டே இருக்கவேண்டும்.”

- உயர்திரு. மு..ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

பெண்கள் குடும்பத்தை மட்டுமே நிர்வகிக்கத் தெரிந்தவர்கள் எனக் கூறுவது சரித்திரப் பிழை. பெண் சமுதாயத்திற்கு ஆட்சி புரியவும் தெரியும் என்பதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிரூபித்துக் காட்டியுள்ளனர். பல்வேறு தடைகளைத்தாண்டி இந்தியாவிலேயே முதல் பெண் வழக்கறிஞராகப் பதிவு செய்தவர் கார்னிலியா. அந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. இந்தச் சமுதாயம் எப்போது பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்கிறதோ, அப்போதுதான் மண்ணும், நாடும் உயரும் என்பது பாரதியின் கூற்று. அதற்கேற்ப பெண்கள் சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் மேலோங்கி வர வேண்டும்சமூகமும் காலமும் ஒன்றாக நிலைத்து நிற்பதில்லை. ஆகவே, பெண் வழக்கறிஞர்கள் நோக்கமும் செயல்பாடுகளும் அறிவு சார்ந்த வாய்ப்புகளை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.”

- உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

“வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை அரசமைப்புச் சட்டம் மற்றும் சனநாயக முறையின்மீது நடத்தப்படும் மிகப்பெரும் தாக்குதலாகும். தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள் என அனைவருக்கும் வாக்குரிமையை அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. ஆனால், மகாராஷ்டிரம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தேசிய சனநாயகக் கூட்டணி அரசு வாக்குத் திருட்டில் ஈடுபட்டு, தேர்தலில் வெற்றிபெற்று வருகிறது. இதைப் பீகாரில் அரங்கேற்ற காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது. வாக்குத் திருட்டுக்கு எதிராகப் பீகாரில் தொடங்கிய இந்தப் புரட்சிப்பயணம் விரைவில் நாடு முழுவதும் விரிவடைந்து தேசிய இயக்கமாக உருவெடுக்கும். தற்போது பா.ச.க. தலைவர்களை ‘வாக்குத் திருடர்கள் என மக்கள் அழைக்கத் தொடங்கி விட்டனர்

- திரு. இராகுல் காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்

“அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாமீது 50 விழுக்காடு வரி விதித்துள்ளார். இரஷ்யா கச்சா எண்ணையைக் குறைந்த விலைக்குத் தருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஆனால், அம்பானிக்கும் அதானிக்கும்தான் கச்சா எண்ணெய் குறைந்த விலைக்கு இரஷ்யா கொடுக்கிறது. அதன் பயன் இந்திய மக்களுக்குச் சென்றடையவில்லை. அமெரிக்காவின் வரிவிதிப்பால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் சரிந்து வருகிறது. மத்தியில் பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சியில் வெளியுறவுக் கொள்கை தோல்வி அடைந்துள்ளது.”

- திரு. செல்வப் பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்

“சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதில் சி.பி.ஐ. உறுதியாக இருக்கிறது. அதேபோல், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடும் தரவேண்டும். தனிச்சட்டம் இயற்றுவது தொடர்பாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். நிச்சயம் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்.”

- இரா. முத்தரசன், சி.பி.ஐ. மாநிலச் செயலாளர்

news
இந்திய செய்திகள்
அரசியல் களம் - அதிரும் எதிரொலி!

இந்திய ஏற்றுமதிப் பொருள்கள்மீது அமெரிக்கா விதித்துள்ள வரி 50 விழுக்காடாக உயர்ந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மேம்போக்கான வெளியுறவுக் கொள்கையின் தோல்வி, விவசாயிகளைக் காப்பதற்காகத் தனிப்பட்ட முறையில் எதையும் இழக்கத் தயாராக இருப்பதாக மோடி கூறினார். ஆனால், பல கோடி இந்தியர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கத் தவறிவிட்டார். அமெரிக்க ஏற்றுமதியை நம்பியுள்ள சிறு தொழில்துறை, நவரத்தின ஆபரணத் தயாரிப்புத் தொழிலில் இலட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்பு பறிபோகும். வெளிநாட்டுத் தலைவர்களைக் கட்டித்தழுவுவது, சிரித்து மகிழ்வது, தற்படம் எடுத்துக்கொள்வது போன்ற பிரதமர் மோடியின் மேம்போக்கான வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்துவிட்டது.”

திரு. மல்லிகார்ஜீன கார்கே, காங்கிரஸ் தேசியத் தலைவர்

டிரம்ப் இன்றைக்கு என்ன கூறினார் என்பதை அறிவீர்களா? இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பிரதமர் மோடியைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு ‘24 மணி நேரத்திற்குள் சண்டையை நிறுத்திவிட வேண்டும்என்று அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிவுறுத்தலுக்குப் பிரதமர் மோடி உடனடியாகக் கீழ்ப்படிந்திருக்கிறார். 24 மணி நேரம் அவகாசம் அளித்தபோதும், பாகிஸ்தான் உடனான சண்டையை அவர் அறிவுறுத்திய 5 மணி நேரத்தில் பிரதமர் நிறுத்தியுள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஆகஸ்டு 27 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது இத்தகவலை வெளியிட்டுள்ளார்.”

திரு. இராகுல் காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்

பீகாரில் நியாயமாக வாக்குப் பதிவு நடைபெற்றால் பா... கூட்டணி தோற்றுவிடும் என்பதால், மக்களை வாக்களிக்க விடாமல் தடுக்கிறார்கள். சாவி கொடுத்தால் ஆடும் பொம்மையாகத் தேர்தல் ஆணையத்தைப் பா... மாற்றிவிட்டது. 65 இலட்சம் பீகார் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியது சனநாயகப் படுகொலையாகும். சொந்த மண்ணில் பிறந்து வாழ்ந்த மக்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதைவிட பயங்கரவாதம் வேறு இருக்க முடியுமா?”

மாண்புமிகு திரு. மு.. ஸ்டாலின். தமிழ்நாடு முதலமைச்சர்

இந்திய மக்கள் கடந்த 40,000 ஆண்டுகளாக ஒரே மரபணுவைப் பெற்றுள்ளதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்துள்ளார். ஐந்தாயிரம் ஆண்டுகாலச் சமூக சமத்துவ மேன்மை குறித்து நாம் பேசுகிறோம்; அவர்கள் பா..., ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தற்போதைய அமைப்பானது 40,000 ஆண்டுகள் தொன்மையானது என்று பேசுகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பா... தோற்கடிக்கப்பட்டது. தற்போது பீகாரிலிருந்து அக்கட்சியை வெளியேற்ற வேண்டிய நேரம் இது.”

திரு. அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர்

தமிழ்நாட்டில் திரையுலகமும் அரசியல் களமும் ஒன்றுக்கொன்று தொடர்போடு பயணித்து வருகிறது. ‘தலைவர்களைக் களத்தில் தேடாமல், திரையரங்குகளில் தேடுவது நியாயம்தானா?’ என்ற கேள்வி எதிரொலித்தாலும், அதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கவில்லை என்பது தெரிகிறது. அரசியல் ஆர்வம், கொள்கைப் பிடிப்பு, மக்கள் சேவை ஆகிய எண்ணங்களுடன் எந்தத் துறையிலிருந்து யார் வந்தாலும் மக்கள் ஆதரவு இருந்தால் அவர்கள் எந்த உச்சத்தையும் பெற முடியும் என்பதை தமிழ்நாட்டு அரசியல் உணர்த்தி இருக்கிறது

திரு. மு. தமிமுன் அன்சாரி, மனிதநேய சனநாயகக் கட்சித் தலைவர்

சனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், மாற்று அரசியல் பேசலாம்; அதில் எந்தத் தவறும் இல்லை. திரைப்படம் மட்டுமின்றி எந்தத் துறையிலிருந்தும் புதியவர்கள் கட்சி தொடங்குவதில் யாருக்கும் ஆட்சேபம் இல்லை. ஆனால், மாற்று அரசியல் பேசி புதிய கட்சி தொடங்குவோர் இப்போது உள்ள அரசியல் கட்சிகளிடமிருந்து எந்த வகையில் மாற்றுக்கொள்கைகளை முன்வைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். திரைக் கவர்ச்சி மட்டுமே வாக்குகளைப் பெற்றுத் தரும் என நடிகர்கள் புதிய கட்சிகள் தொடங்கிமாற்றுஎனக் கூறி ஏமாற்றமாக மாறியவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.”

திரு. கே. பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

news
இந்திய செய்திகள்
நற்செய்திப் பணிகளை வலுப்படுத்த அழைப்பு!

அசாம் மாநிலம் குவஹட்டியில் 44-வது இந்திய துறவறத்தார் ஒன்றிணைந்த கூட்டமைப்பு (CRI) கருத்தரங்கம் நடைபெற்றது. ஆகஸ்டு 30-ஆம் தேதி தொடங்கிய இந்தக் கருத்தரங்கம், தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெற்றன. ‘மேய்ப்புப் பணித்திட்டம்-2033’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வடகிழக்கு இந்தியாவின் 98 துறவற சபைகளைச் சேர்ந்த 115 பிரதிநிதிகள் பங்கேற்றனர். நற்செய்திப் பணி என்பது முழு ஈடுபாட்டுடனும் உற்சாகத்துடனும் இருக்கவேண்டும் எனக்  குருக்கள் செயலர் அருள்தந்தை லியோ சார்ல்ஸ் அறிவுறுத்தினார்.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

ஒரு படைப்பானது அது தன்னை என்றும் அடையாளப்படுத்திக் கொண்டே இருக்கும்; இதுதான் படைப்பு என அறியப்படக்கூடிய அந்த ஒரு கணத்திலேயே அது தன் முகத்தை வேறு விதத்தில் காட்டித் தரும். அதுதான் படைப்பின் சிறப்பு. எளிய மனிதர்களின் சமூகப் பிரச்சினைகளைப் பேசக்கூடிய படைப்புகளுக்கு என்றும் அழிவில்லை. அவை காலம் கடந்தும் நிலைக்கும். படைப்பு எனும் ஆகிருதியை உணர்ந்து பார்க்க வேண்டும்; தொட்டுப் பார்க்கவேண்டும் என்ற காதலினால் எழுந்து நிற்கக்கூடியவர்கள்தான் படைப்பாளர்கள்.”

- திரு. ஆர். மகாதேவன், உச்ச நீதிமன்ற நீதிபதி

அண்மைக்காலமாகஆன்லைன்முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதில் பிரபலமான நிதிநிறுவனங்களின் பெயரைப் போலியாகப் பயன்படுத்தி அப்பாவிப் பொதுமக்களை மோசடி நபர்கள் ஏமாற்றி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் அதிக இலாபம் கொடுப்பதாகக் கூறும்ஆன்லைன்முதலீடு விளம்பரங்களை நம்பி, அடையாளம் தெரியாத நபர்கள் கூறும் வங்கிக்கணக்குகளுக்குப் பணத்தை அனுப்பி ஏமாற்றம் அடைய வேண்டாம். பொதுமக்கள் ஏதேனும் பணமோசடியில் சிக்கினால் உடனடியாகச் சைபர் குற்றப்பிரிவு ‘1930’ என்ற இலவசத் தொலைப்பேசி எண் மூலமாகவோ அல்லது http://cybercrime.gov.in என்ற வலைத்தள முகவரியில் புகார் தெரிவிக்கலாம்.”

திரு. அருண், காவல் ஆணையர்

அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பால் தமிழ்நாட்டில் ஜவுளித் தொழில், ஆட்டோ உதிரிப் பாகங்கள் உற்பத்தி, கடல்சார் பொருள்கள், காலணி உற்பத்தி ஆகியவற்றில் பாதிப்புகள் ஏற்படக்கூடும். மத்திய அரசு சில முயற்சிகளை எடுத்து வருகின்றது. அமெரிக்காவின் வரிவிதிப்பு முறை, அது சார்ந்த மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றோம். இதனால், பொருளாதாரத்தில் நிலையற்றத்தன்மை இருக்கவே செய்கிறது. சாதகமான முயற்சிகளை மேற்கொண்டால் நிலைமை சரியாகும் என்ற நம்பிக்கைக்கான ஒளிக்கீற்று தெரிகிறது.”

- திரு. . உதயச்சந்திரன், நீதித்துறை முதன்மைச் செயலர்

news
இந்திய செய்திகள்
கிறித்தவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டிற்குக் கண்டனம்!

காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் வி.டி. பால்ராம், “கேரளத்தில் கிறிஸ்தவச் சமூக மாணவர்கள் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டில் முறையற்று உதவி பெற்றுள்ளனர்; இதன் காரணமாக, முஸ்லிம் சமூக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்என்று குற்றம் சாட்டியிருந்தார். “சர்ச்சைக்குரிய இக்குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது; சமூக விரிசல்களை ஏற்படுத்தக்கூடியதுஎன்று சீரோ-மலபார் திரு அவை வன்மையாகக் கண்டித்துள்ளது. இக்குற்றச்சாட்டுகள் சமூக அமைதிக்குப்  பாதிப்பை உண்டாக்கும் என்று எச்சரித்துள்ளதுடன், அரசியல் நன்மைக்காக மத அடிப்படையிலான பிரிவினை வாதங்களைத் தூண்டுவதைத் தவிர்க்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.