news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

அறிவுக்கு எல்லை என்பது கிடையாது. அறிவின் அடர்த்தியைப் பொறுத்தே உயிரினங்கள் தரம் பிரிக்கப்படுகின்றன. மூடநம்பிக்கைகளை விலக்கி, அறிவியல் ரீதியாக மனிதனை நெறிப்படுத்துவது அறிவாற்றல். இலக்கியங்களைப் படிக்கும்போதுதான் எளிய மக்களை நம்மால் நேசிக்கமுடியும். சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட இலக்கியங்கள்தான் மனிதனை மேம்பட்டவனாக மாற்றுகின்றன. கோபம், அச்சம், விரக்தி, மன அழுத்தங்களைப் போக்க அறிவாற்றலை அனைவரும் கையாளவேண்டும்.”

திரு. வெ. இறையன்பு மேனாள் தலைமைச் செயலர், தமிழ்நாடு அரசு

இன்றைய காலகட்டத்தில் கூகுள், .. மூலமாகப் பல தகவல்களைச் சில நொடிகளில் அறிய முடியும். ஆனால், ஒரு விசயத்தைப் புதுமையாக, ஆர்வமாகச் சொல்லித் தந்து, மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டி, அவர்களது அறிவாற்றலை அதிகரிக்க ஆசிரியர்களால் மட்டுமே முடியும். பள்ளியில் படித்த அறிவியல் விதிகளும் கணக்கும்தான் விண்வெளித் துறையில் பெருமளவு பயன்படுகின்றன. ‘இஸ்ரோநிறுவனம் நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. ஏராளமான ஆராய்ச்சி மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்பட்டு, புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. மாணவர்கள் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்புகின்றனர். விண்வெளித் துறையில் புதிய தொழில் முனைவோர் உருவாகி வருகின்றனர்.”

திரு. வீரமுத்துவேல், இஸ்ரோ இயக்குநர்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

உலக அளவில் ஏற்பட்டுள்ள புவி அரசியல் சவால்களில் துணிச்சலான நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு, .நா. தற்போது செயல்படவில்லை. அதற்கு நிகராகப் பிற விவாதங்களும் நடவடிக்கைகளும் வேறு சிலரால் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் உலக நாடுகளிடம் அமைதி, பாதுகாப்பிற்கு ஏற்ற அமைப்பாக .நா.வை உலக மக்கள் கருதவில்லை. உலகளாவியச் சட்டத் திட்டங்களை அனைவரும் மதித்து நடக்கவேண்டும். இதில் எந்த நாடும் இரட்டை வேடம் போடக்கூடாது. அதே நேரம் உலகளாவியச் சட்டத் திட்டங்கள் என்பது ஒரு நாட்டின் இறையாண்மையைத் தாக்குவதற்கோ உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலையிடுவதற்கோ அனுமதிக்கக்கூடாது.”

உயர்திரு. பர்வதனேனி ஹரிஷ், இந்தியாவின் நிரந்தரத் தூதர்

உயர்கல்வி நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகளில் யார்மீதும் பாகுபாடு காட்டக்கூடாது. அதேபோல் பாகுபாடு என்ற பெயரில் இந்த விதிமுறைகளை யாரும் தவறாகப் பயன்படுத்தவும் அனுமதிக்கக்கூடாது. மத்திய-மாநில அரசுகள் மற்றும் யு.ஜி.சி. ஆகியவற்றிற்கு இதில் பொறுப்புள்ளது. அனைத்து நடவடிக்கைகளும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வரம்புக்கு உட்பட்டே அமையும். பாகுபாடு குறித்த புகார்களை விசாரிக்க ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒரு குழு அமைக்கப்படவேண்டும். இதில் .பி.சி., எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும். கல்வி நிறுவன வளாகத்திற்குள் எவ்விதப் பாகுபாடு நடவாமல் இருப்பதைக் கண்காணிக்கக் குழு உருவாக்கப்படும்.” 

உயர்திரு. தர்மேந்திர பிரதான், மத்திய கல்வி அமைச்சர்

ஒவ்வோர் இந்தியரின் மிகப்பெரிய ஆயுதமாக, நமது அரசமைப்புச் சட்டம் உள்ளது. அந்தச் சட்டம் நமது குரலாக, நமது உரிமைகளைப் பாதுகாக்கும் கவசமாக உள்ளது. இந்த வலுவான அடித்தளத்தின் மீதுதான் நமது குடியரசு நிற்கிறது. சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தால் மட்டுமே இந்த அடித்தளம் வலுவாகும். நமது அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பது இந்தியக் குடியரசைப் பாதுகாப்பதாகும். அதுவே நமது சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு அளிக்கப்படும் உண்மையான மரியாதையாகும்.”

உயர்திரு. இராகுல்காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

தனி நபர்களின் நேர்மையான முயற்சிகளும் முன்மாதிரியான பங்களிப்புகளும் அங்கீகரிக்கப்பட்டுப் பாராட்டப்பட்டால்தான் ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும். இந்தியா அதற்கெனப் பொதுவான மதிப்புகளாலும் கூட்டு இலட்சியங்களாலும் பிணைக்கப்பட்டு, ஒன்றாகவே இருந்து வருகிறது. அது என்றென்றும் ஒன்றாகவே நீடிக்கும்.”

திரு. சி.பி. இராதாகிருஷ்ணன், குடியரசு துணைத் தலைவர்

தங்களது சிந்தனை மற்றும் நம்பிக்கைகளை வெளியில் கூற துணிச்சல் இல்லாத பலரை நாம் காண்கிறோம். அநீதிக்கு எதிராக மௌனத்தைக் கடைப்பிடிக்கும் நாடுகள் முன்னேற்றமடையாது. சுதந்திரமாகக் கருத்துகளை வெளிப்படுத்தும் நாடுகளே தொடர்ந்து முன்னேறிச் செல்லும். மக்கள் துன்புறுத்தப்படுவதையும், கொலை செய்யப்படுவதையும் நான் காண்கிறேன். நமக்கு நேராதவரை அதற்கு எதிராகக் குரல் எழுப்பாமல் இருப்பது பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கும்.”

திரு. இராகுல் காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்

news
இந்திய செய்திகள்
திருவிவிலியத்தைக் கையால் எழுதி சாதனை படைத்த அருள்சகோதரி!

சிம்லா-சண்டிகர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்சகோதரி மௌரா, திருவிவிலியத்தின் அனைத்துப் பக்கங்களையும் தனது கைப்பட எழுதி மகத்தான ஆன்மிகச் சாதனையைப் படைத்துள்ளார். பல ஆண்டு கால செபம், இடைவிடாத முயற்சியின் விளைவாக இப்பணி சாத்தியமாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அருள்சகோதரி மௌரா, “இதை வெறும் எழுத்துப் பணியாக நான் கருதவில்லை; இது இறைவனுடனான ஓர் ஆழமான உரையாடல் மற்றும் தவக்காலப் பயணம்என்று குறிப்பிட்டுள்ளார்.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

நாம் அனைவரும் பல செய்திகளில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்க வேண்டும். அதுதான் சனநாயகம். எந்த ஒரு செய்தியிலும் கருத்து வேறுபாடு இல்லை என்றால், அங்கு சனநாயகம் இருக்காது. அனைவரும் எல்லா நேரங்களிலும் ஒரே கருத்தில் உடன்பட்டால் அது வேறுபாடுகளுக்குதான் வழி வகுக்கும். அதேநேரம், நாம் மாறுபடும் விதம் சம்பந்தப்பட்ட கருத்துகளைச் செம்மைப்படுத்துவதாக இருக்கவேண்டும். கட்டாயத்தின் பேரில் எவரையும் எதிர்க்கக்கூடாது. அணுகு முறையில் நேர்மறையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருப்பதுதான் சமூகத்திற்கு நல்லது.”

மாண்புமிகு சி.பி. இராதாகிருஷ்ணன், குடியரசு துணைத் தலைவர்

இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கின்ற போதைப் பொருள்களை நாம் நிச்சயம் ஒழிக்கவேண்டும். இதில் மாற்றுக்கருத்து இல்லை. போதையின் பாதையில் இருந்து இளைஞர்களைக் காப்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவேனும் பயன் கிடைத்திருக்கிறது. போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதன் பாதிப்புகளை உணர்ந்து, அதிலிருந்து வெளியே வர வேண்டும். உடன் இருப்பவர்கள் அவர்களைத் திருத்தவேண்டும். போதைப் பொருள் புழக்கம் என்பது மிகப்பெரிய நெட்வொர்க். அதனை அழிக்க ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து செயல்படவேண்டும். போதைப்பொருள் வருகின்ற நுழைவாயில்களை அடைக்க வேண்டும். இத்தகைய செயல்பாடுகளுக்கு எல்லாருமே கைகோர்க்க வேண்டும்.”

 மாண்புமிகு மு. . ஸ்டாலின், தமிழ்நாடு முதல்வர்

சமூக ஊடகங்களால் எந்த அளவுக்கு நன்மையும் பயனும் கிடைக்கின்றனவோ அதே அளவிற்குத் தீமையும் நிறைந்துள்ளது. இதில் முக்கியமானது, சமூக ஊடகங்கள் வாயிலாகப் பயங்கரவாத இயக்கத்தினர் இளைஞர்களை மூளைச்சலவை செய்து தங்கள் பக்கம் ஈர்க்கப் பயன்படுத்தும் போக்காகும். இதைத் தடுக்க ஏதுவாக சந்தேகத்திற்கு இடமான சமூக ஊடகக் கணக்குகளின் செயல்பாடுகளை தமிழ்நாடு காவல்துறை கண்காணித்து வருகிறது. தமிழ்நாட்டில் அண்மைக்காலங்களில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கைது செய்யப்பட்ட பலரும் பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பில் இருக்கப் பாலமாக இருந்தவை சமூக ஊடகத் தளங்களே!”

தமிழ்நாடு காவல்துறை

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் உள்ள மசூதி மற்றும் மதராஸா மீது கல்வீச்சு நிகழ்வுகள் அரங்கேறியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. தீயவர்கள் அனைத்து இடங்களிலும் உள்ளனர்; அவர்கள் எப்போதும் அப்படித்தான் இருப்பார்கள். பல்வேறு மாநிலங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

இந்தியா மதச்சார்பற்ற நாடு; அனைத்துச் சமூகத்தினரும் தங்களது மத நம்பிக்கையைப் பின்பற்ற அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்கியுள்ளது. எனவே, வகுப்புவாத வன்முறையைத் தடுக்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும்.”

திரு. ஃபரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர்

பல நூற்றாண்டுகளாக வடமேற்கு இந்தியாவின் பசுமை நுரையீரலாக ஆரவல்லி மலைத்தொடர் உள்ளது. அந்த மண்டலத்தின் சமூகப் பொருளாதார முதுகெலும்பாகவும் திகழும் ஆரவல்லி மலைத்தொடரைப் பாதுகாப்பது நம் கடமை. எனவே, ஆரவல்லி மலை மற்றும் மலைத்தொடர் குறித்து சுற்றுச்சூழல் அமைச்சகம் அமைத்த குழு அளித்த பரிந்துரைகள், அதை ஏற்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 20-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் மேலும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதனால் சுற்றுச்சூழல் நிபுணர்களைக் கொண்ட புதிய உயர்நிலைக் குழுவை அமைக்க உத்தரவிடப்படுகிறது. அந்தக் குழு அறிக்கை சமர்ப்பித்து அடுத்தகட்ட உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கும் வரை அங்குப் புதிதாகச் சுரங்கப் பணிகளை மேற்கொள்ளவோ, பழைய குத்தகைகளைப் புதுப்பிக்கவோ கூடாது.”

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூரியகாந்த், நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி அகஸ்டின், ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு

தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு தெரிவித்துள்ளோம். அவர்களது கோரிக்கைகளை முதல்வரும் பரிசளிக்க வேண்டும். சமூகநீதி, பெரியார், அம்பேத்கர், மார்க்சிய அரசியலே எங்களுக்கு முதன்மையானது. கூட்டணி என்பது இரண்டாம் பட்சம்தான். ஆர்.எஸ்.எஸ், பா... மற்றும் மதவாதச் சக்திகளை, தமிழ்நாட்டில் காலூன்றச் செய்ய .தி.மு.. உள்ளிட்ட கட்சிகளும், சில அமைப்புகளும் துணை போகின்றன. தமிழ்நாட்டில் பா... வலுப்பெற்றால் .தி.மு.. இல்லாமல் போகும்; பெரியார் அரசியலும் போய்விடும்.\"

தொல். திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி