news
இந்திய செய்திகள்
ஒவ்வொருவரும் நேர்மையுடன் இருந்தால் நம் தேசம் வலிமை பெறும்

ஒவ்வொரு தனி மனிதனும் தன்னளவில் நேர்மையோடும் உண்மையோடும் இருந்திட வேண்டும். நாம் கடைப்பிடிக்கும் சின்னச் சின்ன ஒழுக்கம் சார்ந்த செயல்பாடுகள் நம்மையும் வாழ்வில் உயர்த்தும். நம் நாட்டின் வளர்ச்சிக்கும் அது உறுதுணையாக இருக்கும். நாம் பணியாற்றும் அலுவலகத்தில் நேர மேலாண்மையை நாம் சரியாகப் பின்பற்றினால், நம்மைப் பார்த்து சக ஊழியர்களும் பின்பற்றுவார்கள். யாராவது நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிற எண்ணமில்லாமல், நம் மனமறிந்து உண்மையாகவும் விதிகளை மீறாமலும் செயல்பட்டால் நமக்கான இலக்கினை நம்மால் விரைந்து அடைய முடியும்.”

- திரு. வி. நந்தகுமார், .ஆர்.எஸ்., வருமான வரித்துறை ஆணையர்

news
இந்திய செய்திகள்
‘அனைவருக்கும் எளிதாக நீதி கிடைப்பதே கடமை’

அரசமைப்புச் சட்டம் மற்றும் அடிப்படை உரிமைகளை நீதித்துறை பாதுகாக்கும் என்பதே அரசமைப்புச் சட்டத்தின் நம்பிக்கை. அத்துடன் நீதி பரிபாலன சேவையையும் நீதித்துறை பூர்த்தி செய்யும் என்றும் அரசமைப்புச் சட்டம் நம்புகிறது. அனைவருக்கும் எளிதாக நீதி கிடைப்பதும், அனைத்துக் குடிமக்களையும் அவர்களின் அந்தஸ்தைப் பார்க்காமல் சமமாக நடத்துவதும் அரசமைப்புச் சட்டப்படி நீதித்துறையின் கடமை.”

- திரு. சஞ்சீவ் கன்னா, உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி

news
இந்திய செய்திகள்
மாற்றங்களுக்கு ஏற்ப இளைஞர்கள் விரைவாக மாற வேண்டும்

ஆசிரியர்கள் இளையதலைமுறையினருக்குப் பாடம் நடத்துவதோடு மட்டுமல்லாமல், நாட்டின், கலாச்சாரத்தின் முக்கிய விழுமியங்களையும், நெறிகளையும் கற்பிக்க வேண்டும். ‘எண்ணும் எழுத்தும் கண்கள் போன்றவைஎன்றும், ‘ஆழமான அறிவைப் பெறுதல் ஞானத்தை வளர்க்க உதவும்என்றும் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். ஆழமான அறிவு அனைவருக்கும் மகிழ்ச்சியையும், பொறுப்பு பற்றிய புரிதலையும், கற்கும் ஆர்வத்தையும் தூண்டும். இளைஞர்கள் தங்களுக்குத் தெரியாதவற்றைத் தேடவும், மாற்றங்களுக்கு ஏற்ப விரைவாக மாறவும், இடர்களைக் குறைத்து வாய்ப்புகளைப் பெறவும் முயற்சிக்க வேண்டும்.”

- திரு. பவன்குமார் சிங், திருச்சி, இந்திய மேலாண்மை நிறுவன இயக்குநர்

news
இந்திய செய்திகள்
பணியிடத்தில் நேர்மை அவசியம்

பணியிடத்தில் நேர்மையாகப் பணியாற்றுவது அவசியம். அரசு நிர்வாகத்தில் மனிதாபிமான அணுகுமுறை இருக்க வேண்டும். முடிவுகள் எடுப்பதில் ஒற்றைச்சாளர முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் நேர்மையின் பாதுகாவலர்களாக விளங்க வேண்டும். திருவள்ளுவரின் அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்எனும் குறளுக்கேற்ப அறத்துடன் பணியாற்ற வேண்டும்.”

- திரு. கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்

news
இந்திய செய்திகள்
சிறந்த நூல் ஆசிரியர்களைக் கண்டுபிடித்து உலகுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்

சிறந்த நூல் ஆசிரியர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களை அடையாளம் கண்டு உலகத்துக்கு அறிமுகம் செய்ய வேண்டும். பதிப்பாளர்கள் அனைவரும் பெரும் முயற்சி எடுத்து வருகிறார்கள். புத்தகத் திருவிழா, கண்காட்சி நடக்கிறது. இவற்றுக்கெல்லாம் பிறகும்கூட நூல்கள் விற்பனை ஆவது இல்லை என்பது வருத்தத்துக்குரியது. அனைவரும் நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கும் வாங்கிக் கொடுங்கள். நூல்களை வாங்கினால்தான் எழுத்தாளர்கள் எழுதுவார்கள்.”

- திரு. . சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர்

news
இந்திய செய்திகள்
வத்திக்கானின் தீபாவளி வாழ்த்து!

ஒளியின் ஆதாரமான கடவுள், தீபாவளி திருநாள் கொண்டாடுபவர்களின் மனத்தையும் இதயத்தையும் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் நிரப்பட்டும் என்றும், குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் இரக்கம் மற்றும் மகிழ்ச்சியால் நிரப்பப்படட்டும் என்றும் வத்திக்கானின் பல்சமய உரையாடலுக்கான திருப்பீடத்தின் தலைவர் கர்தினால் மிகுவேல் ஏஞ்சல் அயுசோ குய்சோட் மற்றும் அதன் செயலாளர் இந்துனில் ஜனகரத்ன கொடித்துவக்கு கங்கனமாலகே ஆகியோர் இணைந்து செய்தி அனுப்பியுள்ளனர்.

கிறித்தவர்களும், இந்துகளும், பிற சமய மரபுகளைச் சேர்ந்தவர்களோடும், நல்லெண்ணம் கொண்டவர்களோடும், வேற்றுமைகளுக்கு மத்தியிலும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவது அவசியம் என அவ்வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.