news
இந்திய செய்திகள்
மருத்துவ மாணவியாகக் கந்தமால் சிறுமி!

ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையிலிருந்து ஒரு குழந்தையாகத் தப்பிய ஓர் இளம் கத்தோலிக்கப் பெண்ணான லின்சா பிரதான், தேசியத் தகுதி தேர்வில் (நீட்) தேர்ச்சி பெற்றுள்ளார்.

கிறிஸ்துவின் வல்லமைதான் கடினமான தேர்வில் வெற்றி பெற என்னைப் பலப்படுத்தியதுஎன்றும், “ஒரு மருத்துவர் என்ற முறையில், மத மற்றும் சாதி வேறுபாடுகளைக் கடந்து, எனது ஆண்டவர் இயேசுவைப் போல மக்களுக்குச் சேவை செய்வேன்என்றும் லின்சா பிரதான் தனது நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார்.

news
இந்திய செய்திகள்
நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மக்களுக்கு நீதித்துறை மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது

நீதிப் பரிபாலனம் செய்யும் நீதிபதிகள், தங்களது அறிவையும், அனுபவத்தையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள வேண்டும். நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, மக்களுக்கு நீதித்துறையின் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. எனவே, நீதிமன்றத்தை நாடி வரும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியது நீதித்துறையின் முக்கியக் கடமை. இந்தப் பொறுப்பை நிறைவேற்ற, நீதித்துறையினர் இணைந்து செயல்பட வேண்டும்.”

- திரு. சி.டி. ரவிகுமார், உச்ச நீதிமன்ற நீதிபதி

news
இந்திய செய்திகள்
வளர்ந்த நாடாக உருவெடுக்க புரட்சிகரமான மாற்றம் அவசியம்

இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக உருவெடுக்க புரட்சிகரமான மாற்றம் ஏற்படுவது அவசியம். வர்த்தக மேம்பாடு மற்றும் வளங்களால் மட்டும் பொருளாதார வளர்ச்சியை அடைந்து விட முடியாது. மாறாக, தரமான தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்கான மதிப்புமிக்க தொழில்நுட்பங்களை உருவாக்குவது அவசியம். இந்தியா தற்போது 5-ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. இந்த நிலை மேலும் உயர, நமது தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட வேண்டும்.”

- திரு. எஸ். சோமநாத், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர்

news
இந்திய செய்திகள்
பழங்குடியினரின் பங்கேற்பின்றி நாட்டின் வளர்ச்சி சாத்தியமில்லை

பழங்குடி இனத்தவர் இயற்கையை நன்றாகப் புரிந்துகொண்டுள்ளனர். அவர்கள் பல நூற்றாண்டுகளாகச் சுற்றுச்சூழலுடன் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது சிந்தனை மற்றும் வாழும் விதத்தைப் புரிந்துகொள்வதன் மூலம் இந்தியாவின் நீடித்த வளர்ச்சிக்கு நாம் பங்களிக்க முடியும். நமது பழங்குடியினச் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் தீவிரமான பங்கேற்பு இருந்தால்தான் நாட்டின் வளர்ச்சி சாத்தியமாகும்.”

- திருமதி. திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர்

news
இந்திய செய்திகள்
மணல் ஆலை திட்டத்தை எதிர்த்து மனிதச் சங்கிலி

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் இந்திய அரிய மணல் ஆலை உள்ளது. இந்த ஆலைக்காகக் குமரி மாவட்டத்தில் மேலும் சில கடற்கரை கிராமங்களில் இருந்து புதிதாக மண் எடுக்க அரசு திட்டம் தீட்டியுள்ளது. இதற்கான கருத்துக் கேட்பு கூட்டம் அக்டோபர் 1 -ஆம் தேதி பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெறும்  என ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்தது. ஆனால், மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதால் அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் இனி குமரி மாவட்டத்திற்குள் வரக்கூடாது என்பதற்காக  200 கிராமங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டார்கள். 

news
இந்திய செய்திகள்
மணல் ஆலை திட்டத்தை எதிர்த்து மனிதச் சங்கிலி

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் இந்திய அரிய மணல் ஆலை உள்ளது. இந்த ஆலைக்காகக் குமரி மாவட்டத்தில் மேலும் சில கடற்கரை கிராமங்களில் இருந்து புதிதாக மண் எடுக்க அரசு திட்டம் தீட்டியுள்ளது. இதற்கான கருத்துக் கேட்பு கூட்டம் அக்டோபர் 1 -ஆம் தேதி பத்மநாபபுரம் ஆர்.டி.. அலுவலகத்தில் நடைபெறும்  என ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்தது. ஆனால், மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதால் அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் இனி குமரி மாவட்டத்திற்குள் வரக்கூடாது என்பதற்காக  200 கிராமங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டார்கள்.