news
இந்திய செய்திகள்
கருத்துரிமையின் உண்மையான நோக்கம் காக்கப்பட வேண்டும்

கருத்துரிமை என்பது மனித குலத்துக்குக் கிடைத்த பெரும் பேறு! அறிவுப்பூர்வமான கருத்துகளைத் தெரிவித்து, ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்த வேண்டியது அவசியம். மாறாக, விவாதங்களை முடக்கினால் கருத்துரிமையின் உண்மையான நோக்கம் முழுமை அடையாது. சனநாயகக் கோவில் என்னும் நாடாளுமன்றத்தில் பேச்சுவார்த்தை, விவாதம், ஆலோசனை, கருத்துப் பரிமாற்றம் என அனைத்தும் தேவையற்ற இடையூறுகளால் பாதிக்கப்பட்டு, அதன் புனிதத்தன்மையைச் சீரழிக்கிறது.”

மாண்புமிகு. ஜெகதீஷ் தன்கர், குடியரசுத் துணைத் தலைவர்

news
இந்திய செய்திகள்
புத்தகத்தைப் படித்து அதில் கூறும் அறத்தின் வழி செயல்படுதல் வேண்டும்

புத்தகங்களைப் படிப்பவர்கள் அதில் உள்ள கருத்துகளை உள்வாங்கி வாழ்க்கையில் செயல்படுவதில்லை. படித்தவர்கள், தாம் கொண்ட கருத்தில் மாற்றுக்கருத்து உடையவர்களையும் கேட்டுச் செயல்படுவதற்கு வள்ளுவர் வழிகாட்டியுள்ளார். ஆனால், தற்போது மாற்றுக் கருத்தை ஏற்றுக் கொள்ளும் மனநிலையுள்ளோர் குறைந்துவிட்டனர். புத்தகம் படிக்கத் தெரிந்தவர் மனிதராகவும் படிக்கத் தெரியாதவரை விலங்காகவும் வள்ளுவர் சுட்டிக்காட்டுகிறார். புத்தகத்தைப் படித்தால் மட்டும் போதாது, அதில் கூறும் அறத்தின் வழி செயல்படுவதே சிறந்ததாகும்.”

- பேச்சாளர் திரு. சுகி சிவம்

news
இந்திய செய்திகள்
புத்தகங்களை வாங்கி பரிசளிப்பது சமூக மேம்பாட்டுக்குச் செய்யும் உதவி

அறிவை மேம்படுத்தவே புத்தகக் காட்சி நடைபெறுகிறது. புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் குழந்தைகளுக்கான புத்தகங்களை வாங்கி பரிசளிப்பது நல்லது. புத்தகங்களைப் பரிசளிப்பது தர்மம் புரிவதற்குச் சமம். ஆகவே, நல்ல புத்தகங்களை வாங்கி குழந்தைகள் முதல் அனைவருக்கும் பரிசளிப்பது இச்சமூக மேம்பாட்டுக்குச் செய்யும் உதவியாகும்.”

- திரு. மோகனசுந்தரம், பட்டிமன்றப் பேச்சாளர்

news
இந்திய செய்திகள்
மனிதநேயத்துடன் எழுதும் படைப்புகளே காலம் கடந்தும் நிற்கும்

புத்தகங்களைத் தொடர்ந்து வாசிப்பவர்கள் நீண்ட காலம் சுவாசித்து வாழ்பவர்களாக இருப்பார்கள். படைப்பாளிகள் தான் வாழும் காலத்தில் சமுதாயத்தின் கலாச்சார பண்பாட்டை உயர்த்தி பிடிக்கும் வகையில் படைப்புகளை வழங்க வேண்டும். அத்தகைய எழுத்தாளர்களே உயர்ந்த படைப்பாளிகளாகக் கருதப்படுவர். மனிதநேயத்துடன் எழுதுபவர்களே வரலாற்றில் இடம்பிடிக்கவும் முடியும். அத்தகைய படைப்புகளே காலம் கடந்தும் நிற்கும்.”

- தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் 

news
இந்திய செய்திகள்
டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக இரத்து செய்ய வேண்டும்

மத்திய அரசு டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக இரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றினாலும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தடை செய்ய வேண்டும்; இத்திட்டத்தைத் தடை செய்யாவிட்டால் அடுத்தக் கட்ட போராட்டத்தை முன்னெடுப்போம். தமிழகம் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மற்றொரு போராட்டத்தைச் சந்திக்க வேண்டி இருக்கும்.”

- பி.ஆர். பாண்டியன், தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர்

news
இந்திய செய்திகள்
சிறுபான்மை வழிபாட்டுத் தளங்களை மாநில அரசு கட்டுப்படுத்த முயற்சி

மகாராஷ்டிரா மாநிலத்தில் அனைத்து மதங்களின் வழிப்பாட்டுத் தளங்களையும் அரசின் கட்டுப்பாட்டுக்குள்ளாக்கும் அரசின் புதிய முன்மொழிவுக்குக் கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியாஸ் மற்றும் கிறித்தவத் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள். இந்தப் புதிய முன்மொழிவானது இந்திய அரசு கிறித்தவ வழிபாட்டுத் தளங்கள் மற்றும் சொத்துகளை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள்ளாக்கும் முயற்சியாகும். இந்தத் திட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டம் கொடுத்த மதச் சுதந்திரத்திற்கு முரணானது என்று தெரிவித்தார் கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியாஸ். இந்த முன்மொழிவு பற்றி மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் தலைவர் இராகுல் நார்வேகார் கூறும்போது, “இந்தியாவின் பல்துறை அமைப்பு அனைத்து மதங்களையும் சமமாகக் கையாள வேண்டும்என்று கூறினார். ஆனால், கிறித்தவத் தலைவர்கள் இந்தப் புதிய முன்மொழிவை நிராகரித்தனர்; இது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும் தெரிவித்தார்கள்.